Politics
"80/80 தொகுதிகளில் வென்றாலும் EVM குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன்" - அகிலேஷ் அதிரடி !
18 ஆவது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதிவியேற்றனர். பின்னர் இரு அவைகள் கூட்டத்தில் குடியரசு தலைவர் உரையாற்றினார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் 7-ம் நாளான இன்று சமாஜ்வாதி கட்சி தலைவரும் எம்.பியான அகிலேஷ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பாஜகவினர் 400 இடங்களை கைப்பற்றுவோம் என்றார்கள். ஆனால் 240 தொகுதிகளில் சுருங்கியுள்ளனர். இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தார்மீக வெற்றியை பெற்றுள்ளது.
EVM வாக்குப்பதிவு முறையில் ஏராளமான சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் எனது கட்சி 80/80 இடங்களில் வெற்றிபெற்றாலும் நான் EVM வாக்குப்பதிவு முறை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவேன். இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருப்பதாக பாஜக கூறி வருகிறது.
ஆனால், தனிநபர் வருமானம், பசி குறியீடு, மக்களின் மகிழ்ச்சி குறியீடு போன்ற ஆய்வுகளில் நம் நிலை என்ன என்பது குறித்து அரசு தொடர்ந்து மறைத்து வருகிறது. கடந்த 10 வருட பா.ஜ.க அரசின் சாதனை என்பது ஒரு போட்டித் தேர்வு மாஃபியா குழுவை உருவாக்கியதுதான்.
ஒருவர் தேர்வுக்கு தயாராகி, தேர்வுக்காக காத்திருந்தால், தேர்வுக்கு முதல்நாள் தேர்வுத் தாள் வெளியாகிறது. அதோடு அனைத்து தேர்வுகளின் தாள்களும் கசிந்திருக்கின்றன. இரட்டை இன்ஜின் அரசின் தோல்விக்கு மிக முக்கிய உதாரணம் உத்தரப்பிரதேசம்தான்.
அயோத்தி கோயில் அமைந்திருக்கும் பைசாபாத் தொகுதியில் பாஜக தோல்வியடைந்து எங்கள் கட்சியே வென்றுள்ளது. ராமரின் முடிவும் அதுவாகத்தான் இருந்திருக்கிறது. மக்களின் நம்பிக்கையைக் கொல்லும் அரசால் நிகழ்காலத்தை மாற்றவோ அல்லது எதிர்காலத்தை சிறப்பாகவோ மாற்ற முடியாது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!