Politics
தேர்வுக்கு முன்னரே கசிந்த நீட் வினாத்தாள் : ஆதாரத்தை வெளியிட்ட பீகார் போலீசார்... சிக்கலில் ஒன்றிய அரசு !
எரிந்த நிலையில் கிடைத்த கேள்வித்தாள்களில் உள்ள 68 கேள்விகள் உண்மையான கேள்வித்தாளுடன் ஒத்துப்போவதாக பீகார் போலீசார் ஒன்றிய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.
நடப்பு ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மோசடி நிகழ்ந்துள்ளது. ஆள் மாறாட்டம், தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என பல வழிகளில் முறைகேடு நடந்துள்ளது. தொடர்ந்து நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வலுத்தது.
பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்த நிலையில், இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஏராளமான முறைகேடுகள் வெளிவந்தன.இதனிடையே நீட் தேர்வுக்கு முதல் நாள் இரவு, நீட் வினாத்தாள் கிடைத்ததாக இதன் மூலம் ஏராளமானோர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.
இது குறித்து தற்போது வரை 20 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவி அத்ரி என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், எரிந்த நிலையில் கிடைத்த கேள்வித்தாள்களில் உள்ள 68 கேள்விகள் உண்மையான கேள்வித்தாளுடன் ஒத்துப்போவதாக பீகார் போலீசார் ஒன்றிய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் கேள்வித்தாள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து கசிந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து பிகார் மாநிலத்தில் எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட கேள்வித்தாள்களை தடைய அறிவியல் சோதனைக்கு உட்பட்டதில் 68 கேள்விகள் உண்மையான கேள்வித்தாளுடன் ஒத்துப் போவதாக பிஹார் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இந்தக் கேள்வித்தாளில் உள்ள வரிசை எண்களை சோதித்த போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தின் எண் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் ஜார்கண்ட் மாநிலம் சென்று பீகார் போலீசார் சோதனை நடத்தினர். அந்த தேர்வு மையத்துக்கு அனுப்பப்பட்ட கேள்வித்தாள் வைத்திருந்த பாக்கெட் பின்புறம் திறக்கப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இந்த விவரங்களை ஒன்றிய அரசுக்கு அளித்த அறிக்கையில் பிஹார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“வீடியோலாம் எடுக்க கூடாது...” - தேர்தல் அலுவலரை தடுத்த தஞ்சை பாஜக நிர்வாகி... அதிரடி காட்டிய போலீஸ்!
-
“நாங்கள் கொள்கையில் நீடித்து வருகிறோம்...” - CPIM மாநில செயலாளர் சண்முகம் அதிரடி!
-
5 மாநில தேர்தல் முடிந்தவுடன் இது நடக்கும் : பா.ஜ.க அரசின் திட்டம் - ராகுல் காந்தி எச்சரிக்கை!
-
பா.ஜ.க ஆளும் அரியானாவில் 3 வயது சிறுமி வன்கொடுமை : உச்சநீதிமன்றம் தலையிட்ட பின் குற்றவாளிகள் கைது!
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!