Politics
பாஜகவை நம்பி சென்று ஏமாந்த ஏக்நாத் ஷின்டே - அஜித் பவார் : மஹாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி முன்னிலை !
சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் மூலம் கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார்.
இந்த கூட்டணியில் துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது.அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு வெளியேறினார். அவருக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டணியில் பாஜக இணைத்துக்கொண்டது.
இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு மகாராஷ்டிராவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 10 தொகுதிகளிளும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் 8 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
அதே நேரம் பாஜக 11 தொகுதிகளிலும், ஷிண்டே தலைமையிலான சிவசேனா 6 தொகுதிகளிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. மொத்தமாக இந்தியா கூட்டணி 29 தொகுதியிலும், பாஜக கூட்டணி 18 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.
Also Read
-
“41 பேர் உயிரி*ந்தபோது ‘மனசாட்சி’ இல்லாமல் ஓடிச்சென்ற நாள் இன்று!” : மதுராந்தகத்தில் உதயநிதி பேச்சு!
-
அரசாணை வெளியிடுவது.. திரும்பப் பெறுவது.. repeat! : த.வெ.க அரசுக்கு எழும் கண்டனங்கள்!
-
16 ஆண்டுகளாக வழங்கிவந்த ‘முட்டைகள்’ தவெக ஆட்சியில் நிறுத்தம்! - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
சட்டம், ஒழுங்கு தகவல்கள் RTI கீழ் விலக்கு.. கடும் எதிர்ப்பு கிளம்பியதும் U-Turn அடித்த தவெக அரசு!
-
“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!