Politics
மக்களவை தேர்தல் : பா.ஜ.கவின் கனவை கலைத்த இந்தியா கூட்டணி!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தளில் களம் கண்டுள்ளனர். இதுவரை இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரங்களின் போது 400 இடங்களுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் பெருமை பாடினர்.
ஆனால் தற்போது, பா.ஜ.கவின் கனவு கலைந்து விட்டதை, தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது. இந்தியா கூட்டணி 236 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், கேரளா, ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானா, தெலங்கானா, ஜம்மு - காஷ்மீர், மணிப்பூர் ஆகிய மாநிங்களில் இந்திய கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி முகத்தில் உள்ளனர்.
குறிப்பாக பா.ஜ.கவின் கோட்டையாக கருதப்பட்ட உத்தர பிரதேசத்தில் இந்தியா கூட்டணி 43 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணியில் பல இடங்களில் பா.ஜ.க தோல்வியை தழுவியுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க மட்டும் 303 இடங்களில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால் 2024 தேர்தலில் 239 இடங்களில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணியால் 64 தொகுதிகளை பா.ஜ.க இழக்க உள்ளது.
காங்கிரஸ் 100 , சமாஜ்வாதி கட்சி 35, திரிணாமுல் காங்கிரஸ் 30, தி.மு.க 20 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் கி.வீரமணி பேச்சு!
-
“மத ரீதியான நிகழ்ச்சி நடத்தியது மதச்சார்பின்மைக்கு விரோதமானது” : த.வெ.க அரசுக்கு CPM எதிர்ப்பு!
-
“1985 வரலாற நடக்க வச்சுடாதீங்க...” விஜய்யை எச்சரிக்கும் மீனவர்கள்.. MGR ஆட்சியில் 1985-ல் நடந்தது என்ன?
-
‘டோரதி’ – திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசும் துணிச்சலான முயற்சி!
-
“தமிழ்நாட்டில் விலையும், கொலையும்தான் உயர்கிறது” : த.வெ.க அரசு மீது கனிமொழி எம்.பி தாக்கு!