Politics
ஒன்றிய அமைச்சர் பேரணியில் காங்கிரஸ் ஆதரவாளர்... பத்திரிகையாளரிடம் கூறிய ஷாக் காரணம்... வீடியோ வைரல்!
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. மீதமிருக்கும் தொகுதிகளுக்கு ஜூன் 1-ம் தேதியோடு தேர்தல் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஒன்றிய அமைச்சர் மனோஜ் திவாரியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
டெல்லியின் வட கிழக்கு தொகுதியில் பாஜக சார்பில் ஒன்றிய அமைச்சர் மனோஜ் திவாரி மீண்டும் போட்டியிடுகிறார். அதே தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமார் போட்டியிடுகிறார். இந்த சூழலில் பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரிக்கு ஆதரவாக தொகுதியின் பல்வேறு பகுதிகளில் வீதியாக வீதியாக சென்று பலரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அதில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமாரின் ஆதரவாளர் ஒருவரும் இருந்துள்ளார். இதையடுத்து பேரணியை வீடியோ எடுக்க சென்ற பத்திரிகையாளர், காங்கிரஸ் ஆதரவாளரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அப்போது தான் காங்கிரஸ் வேட்பாளர் கன்னையா குமாரின் ஆதரவாளர் என்று அந்த நபர் தெரிவித்தார்.
மேலும் தேர்தல் பேரணிக்கு செல்வதால் வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். அதாவது பாஜக பேரணியில் பலரையும் பணம் கொடுத்து அழைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கருத்துகளையும் பெற்று வருகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!