Politics
வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளருக்கு பிடி வாரண்ட்... காரணம் என்ன?
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர். அந்த வகையில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்காக அக்ஷய் காந்தி பாம் (Akshay Kanti Bam) அறிவிக்கப்பட்டார். ஆனால் இவர் இறுதி நாளில் தனது வேட்புமனுவை திரும்பப்பெற்று காங்கிரஸில் இணைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு இவருக்கு கண்டங்களுக்கு குவிந்தது.
இந்த சூழலில் தற்போது கொலை முயற்சி வழக்கில் அக்ஷய் காந்தி மற்றும் அவரது தந்தை ஆகியோருக்கு பிடி வாரண்ட் கொடுத்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். கடந்த 2007-ம் ஆண்டு நில தகராறு ஒன்றில் யூனுஸ் படேல் என்ற நபரை தாக்கியதாக அக்ஷய் காந்தி மற்றும் அவரது தந்தை மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக நேரில் ஆஜராக பலமுறை நீதிமன்றம் அக்ஷய் காந்திக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அவையை பின்பற்றாமல் இருந்து வந்துள்ளார் அக்ஷய் காந்தி. அந்த வகையில் கடந்த ஏப்.24-ம் தேதி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து அவர்களுக்கான முன்ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மே 10-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று (மே 10) அக்ஷய் காந்தி நேரில் ஆஜராகவில்லை. மேலும் தான் வெளியூர் சென்றிருப்பதாவது, தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறும் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு எதிராக பிடி வாரண்ட் உத்தரவையும் பிறப்பித்து, வரும் ஜூலை 8-ம் தேதிக்குள் இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!