Politics
முதலில் twitter (X), தற்போது WhatsApp : ஒன்றிய பா.ஜ.க.வின் அட்டூழியம்!
ஹிட்லர் காலத்து சர்வாதிகாரத்திற்கும், நடப்பு சர்வாதிகாரத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெள்ளத் தெளிவாக வேறுபிரித்து காட்டிவருகிறது பா.ஜ.க.
முன்பு, வெளிப்படையாக அடக்குமுறை, நாடுகடத்தல், சிறுபான்மையின ஒழிப்பு ஆகியவை நடத்தப்பட்டது போல, தற்போது மறைமுகமாக அதே செயல்கள் அரங்கேறிவருகின்றன.
எனினும், பா.ஜ.க நடத்துகிற இந்நாடகம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் கண்டறியப்பட்டு, பா.ஜ.க.விற்கு எதிராக திரும்பி வருகிறது.
அவ்வகையில், ஒரு மாதத்திற்கு முன்பு கூட மணிப்பூர் கலவரம், விவசாய சிக்கல் ஆகியவை தொடர்பாக ஒன்றிய அரசை கண்டிக்கும் பதிவுகளை X தளத்திலிருந்து நீக்க ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் வற்ப்புறுத்துவதாக X நிறுவனமே தெரிவித்தது.
“ஒன்றிய பா.ஜ.க அரசின் கோரிக்கை, கருத்துரிமைக்கு தடையாக இருப்பது, கண்டிக்கக்கூடியதாக விளங்குகின்ற போதிலும், தவிர்க்கமுடியாமல் ஒன்றிய அரசின் கோரிக்கையை ஏற்கிறோம்.
எனினும், X தள பதிவுகளின் முடக்கம் இந்தியாவிற்குள் மட்டுமே அமல்படுத்தப்படும்” என்று மக்களுக்கு வெளிப்படையான பதிவை வெளியிட்டது X நிறுவனம்.
ஒன்றிய அரசின் இந்த கருத்துரிமை பறிப்பு நடவடிக்கைக்கு உலகளவில் கண்டனங்கள் எழுந்து, அதற்கான தீர்வே கிடைக்கப்படாத நிலையில், தற்போது மற்றொரு சர்ச்சை செயலில் ஈடுபட்டிருக்கிறது பா.ஜ.க.
ஒன்றிய பா.ஜ.க அரசிற்கு எதிரான பதிவுகளை முடக்கியால் போதாது என்று, மக்களின் தனிப்பட்ட உரிமைகளிலும் மூக்கை விடும் செயல் தான் அது.
அதில் ஒரு பகுதியாக, இந்திய தகவல் தொடர்புத்துறையில், புதிய IT விதிமுறைகளை வகுத்துள்ளோம் என WhatsApp பயன்பாட்டாளர்களின் தகவல்களை சூரையாட திட்டமிட்டிருக்கிறது பா.ஜ.க.
அதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றம் சென்ற Whatsapp நிறுவனம், “வாட்ஸ்அப் தகவல்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுதான் பல கோடி மக்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப்பில் பல மில்லியன் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இது பாதுகாப்பானது. அதனை encryption செய்ய முடியாது.
புதிய IT விதிமுறைகளை சுட்டிக்காட்டி, தகவல் அனுப்பிய நபருடைய விவரங்களை வழங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்துகிறது. அது சாத்தியமில்லை.
வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில், end to end encryption-ஐ சிதைக்கும் வகையில் ஒன்றிய அரசு எங்களை கட்டுப்படுத்தினால், நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்!” என வாதிட்டுள்ளது.
இதன் வழி, மக்களின் கருத்துரிமையும், பாதுகாப்பையும் அச்சுறுத்த எண்ணும் பா.ஜ.க, ஹிடலரின் ஆட்சியை இந்தியாவிலும் செயல்படுத்த மும்முறமாக செயல்பட்டு வருவது அமபலமாகியுள்ளது.
இதற்கு உலக அரங்கில் எதிர்ப்புகள் அதிகரித்தாலும், மோடியின் ஆட்சி முடிவை தீர்மானிக்கும் இடத்தில் மக்கள் இருக்கிறார்கள் என்பது மக்களவை தேர்தல் முடிவுகளின் வழி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது! : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
-
பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க.வின் முப்பெரும் விழா! : நாளை (செப்.17) கரூரில் கருத்தியல் கோலாகலம்!
-
சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்... காவல்துறை அறிவிப்பு... முழு விவரம் உள்ளே !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !