Politics
மஹாராஷ்டிராவில் நிறைவடைந்த இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு : முழு விவரம் என்ன ?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கும் நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜகவின் NDA கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
தொடர்ந்து பல முக்கிய பகுதிகளிலும் அரசியல் கட்சி தலைவர்கள் மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் பல மாநிலங்களில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றைய முன்தினம் ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியின் தொகுதி பங்கீடு முழுமையாக நிறைவடைந்தது.
இந்த சூழலில் ஜம்மு & காஷ்மீரில் நேற்று கூட்டணி நிறைவடைந்தது. காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தலா 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதனைத் தொடர்ந்து இன்று பெரிய மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவடைத்துள்ளது.
அதன்படி 48 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் சிவ சேனா உத்தவ் தாக்கரே பிரிவு 21 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவு 10 இடங்களிலும் போட்டியிடவுள்ளன. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!