Politics
தேர்தலுக்கு முன்னர் பாஜகவிலிருந்து விலகும் முக்கிய தலைவர்கள் : வடமாநிலத்திலேயே பாஜகவுக்கு தொடரும் சோகம் !
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் பல்வேறு கட்டங்களாக தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், பாஜக அறிவித்த சில வேட்பாளர்கள் போட்டியிட மறுத்து விலகினர். இது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.
அதோடு தேர்தலுக்கு முன்னர் பாஜகவிலிருந்து முக்கிய தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரேந்தர் சிங் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் பெரும் செல்வாக்கை கொண்டுள்ள பிரேந்தர் சிங் பாஜகவிலிருந்து விலகியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது. பிரேந்தர் சிங்குடன் முன்னாள் எம்.எல்.ஏ.வான அவரின் மனைவியும் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக கூறியுள்ளார்.
Also Read
-
மதுராந்தகம் தொகுதி மக்களுக்காக.. மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய செய்தி.. தவெக-வை ஓட்டால் விரட்டுங்கள்!
-
திமுக தலைவர் வெளியிட்ட வீடியோ.. தாராபுரம் தொகுதி வாக்காளர்களே.. உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்!
-
“த.வெ.க தூய சக்தி அல்ல; துயர சக்தி” : மதுராந்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!
-
“சட்டமன்றத்தில் முதலமைச்சர் இன்னும் Dance Fightதான் போடல” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
-
“தோல்விப் பயத்தால் ரூ.10,000 கொடுக்கம் த.வெ.க” : தேர்தல் ஆணையத்தில் என்.ஆர்.இளங்கோ புகார் மனு!