Politics
பாஜகவுக்கு நிதி அளித்தால் மட்டுமே அரசு ஒப்பந்தங்கள் : தேர்தல் பத்திரத்தால் வெளிவந்த பாஜகவின் ஊழல்கள் !
ஒன்றிய பாஜக அரசு கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.
மேலும், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை SBI வங்கி வெளியிடவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முதலில் இதற்கு காலஅவகாசம் கேட்ட SBI உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து அந்த ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அந்த அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட்டது.
இந்த அறிக்கையில் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம் வெளியானது. அதில் பாஜகவுக்கே அதிக நன்கொடை சென்றதும் உறுதியானது. மேலும், நிதி ஒதுக்கும் நிறுவனங்களுக்கே அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதும் இதன்மூலம் உறுதியானது.
இந்த நிலையில், பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளித்த நிறுவனத்துக்கு பல கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை பாஜக வழங்கியது அம்பலமாகியது. எந்த நிறுவனம் யாருக்கு நிதி வழங்கியது என்பது குறித்த விவரங்களை நேற்று SBI வங்கி வெளியிட்டது. இதில், க்னோவைச் சேர்ந்த அப்கோ இன்ஃப்ராடெக் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு ரூ.10 கோடி நிதி அளித்துள்ளது.
அதற்கு முன்னர் அந்த நிறுவனத்துக்கு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் 6.4 கிமீ நீளமுள்ள இசட்-மோர்ச் சுரங்கப்பாதையை அமைப்பதற்காக ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ரூ.1547 கோடி மதிப்பு கொண்டதாகும். அடுத்த ஆண்டே அதே நிறுவனம் பாஜகவுக்கு மீண்டும் 10 கோடி நிதி அளித்துள்ளது.
அதன் பின்னர் இந்த நிறுவனம் 650 கிமீ டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா விரைவுச் சாலையின் 28.92 கிமீ நீளத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து பெற்றுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீரின் ஜம்மு பிரிவில் குஞ்ச்வானி மற்றும் சித்ரா இடையே 13.3 கிமீ பகுதியும், டோமல் மற்றும் கத்ரா இடையே 15.62 கிமீ பகுதிகளை கட்டுவதற்கான ஒப்பந்தத்தையும் பெற்றுள்ளது. இதன் மதிப்பு ரூ.1547 கோடி என கூறப்பட்டுள்ளது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!