Politics
40-க்கு 40 : திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி... எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி? - முழு விவரம் !
இந்தியாவில் இன்னும் ஓரிரு மாதங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாகியுள்ளது.
இந்த கூட்டணி இந்தியா முழுவதும் தேர்தல் களத்தில் இறங்கவுள்ள நிலையில், இதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. அண்மையில் டெல்லி, ஹரியானா, குஜராத், கோவா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்து றுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்துள்ளது.
அதன் முழு விவரம் பின்வருமாறு:
1. தி.மு.க. (DMK) - 21
2. காங்கிரஸ் (Congress) - 10 (தமிழ்நாடு - 9, புதுச்சேரி - 1)
3. ம.தி.மு.க. (MDMK) - 1
4. சி.பி.ஐ.(எம்) (CPIM) - 2
5. சி.பி.ஐ. (CPI) - 2
6. வி.சி.க. (VCK) - 2
7. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) - 1
8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK) - 1
இதில்,
* IUML - இராமநாதபுரம் தொகுதி
* KMDK - நாமக்கல் தொகுதி
* VCK - விழுப்புரம், சிதம்பரம் ஆகிய 2 தொகுதிகள் இறுதிசெய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!