Politics
"நிலவுக்கு செல்ல 41 நாள், பெயரை கொடுக்க 140 நாளா?"- SBI விவகாரத்தில் ஒன்றிய அரசை விமர்சித்த சு.வெங்கடேசன்
ஒன்றிய பா.ஜ.க அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்குப் பிடித்த அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம். மேலும் தேர்தல் பத்திரங்கள் பாரத ஸ்டேட் வங்கியின் மூலம் ரூ.1000 முதல் ரூ. 1 கோடி வரை விற்பனை செய்யப்பட்டது.
அதேநேரம் தேர்தல் பத்திரங்களை வாக்குபவர் பெயர் முகவரி உள்ளிட்ட விவரங்கள் இருக்காது. இந்த பத்திரத்தை 15 நாட்களுக்குள் பணமாக மாற்ற வேண்டும். இல்லை என்றால் தேர்தல் பத்திரங்களின் தொகை பிரதமர் நிவாரண நிதிக்குச் சென்றுவிடும். இப்படியான சிக்கலும் இந்த தேர்தல் பத்திரத்திலிருந்தது.
இந்த தேர்தல் பத்திரம் முழுக்க முழுக்க பா.ஜ.க கட்சிக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளில் பா.ஜ.க. மட்டும் ரூ.5,272 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது மொத்த நிதியில் 58 சதவிகிதம் ஆகும். இதன் காரணமாக தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை, எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.
மேலும், 2019ம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்களை மார்ச் 6 ஆம் தேதிக்குள் SBI வங்கி தேர்தல் ஆணையத்தில் அளிக்க வேண்டும் என்றும் நன்கொடை கொடுத்தோர் விவரங்களைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் மார்ச் 13 ஆம் தேதிக்குள் வெளியிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டனர்.
இதனிடையே இரு நாட்களுக்கு முன்னர் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட எஸ்.பி.ஐ வங்கி ஜூன் மாதம் வரையில் அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்துள்ள பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு முன்னர் இந்த விவரங்களை வெளியிடுவதில் இருந்து தவிர்க்கவே எஸ்.பி.ஐ இதுபோன்ற கோரிக்கையை எழுப்பியுள்ளதாக இந்த சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எஸ்.பி.ஐ வங்கியை விமர்சித்துள்ளார். இது குறித்து தனது சமூகவலைத்தள பக்கத்தில், "சந்திராயன் நிலவுக்கு செல்ல 41 நாள் ஆனது.அது நவீன அறிவியலின் சாதனை.மும்பையிலிருக்கும் SBI டில்லியிலிருக்கும் உச்சநீமன்றத்தில் நன்கொடையாளர்களின் பெயரை கொடுக்க 140 நாள் கேட்கிறது. இது நவீன ஊழலின் சாதனை. 48 கோடி வாடிக்கையாளர்களின் நம்பிக்கை #SBI. இனி பின்னொட்டாக #ModiKaParivar ஐ இணைத்துக் கொள்ளட்டும்" என்று விமர்சித்துள்ளார்.
Also Read
-
கையில் பனையூர் மூர்த்தி புகைப்பிடிப்பது.. First உங்க Tatoo-வ அழிச்சுட்டு வாங்க.. ஜெகதீஸ்வரிக்கு பதிலடி!
-
“மொட்டை அடிச்சுருங்க.. ஒருவரது தோற்றம்தான்..” - பள்ளியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி சர்ச்சை பேச்சு!
-
பாசிசத்திற்கு வாலாட்டும் ராஜவிசுவாசம்! : த.வெ.க.வின் இரட்டை நிலைப்பாட்டிற்கு ஆ.ராசா எம்.பி கண்டனம்!
-
“நவம்பர் 15-க்கு மேல்... தமிழ்நாட்டை நோக்கி வரும் புயல்!” : வி.என்.துரை எச்சரிக்கை!
-
“தலைகீழாக மாறும் தமிழ்நாட்டின் பொருளாதாரம் !” : வரி வருவாய் சரிவுக்கு, டி.ஆர்.பி.ராஜா கண்டனம்!