Politics
நேற்று கர்நாடகா, இன்று கேரளா தமிழ்நாடு : ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் வெகுண்டெழுந்த மாநில அரசுகள்!
ஒன்றிய பா.ஜ.க அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பின்னர் அடுத்தநாள் பிப்.1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதேநேரம் எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. உதாரணத்திற்குத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மொத்தமே வெறும் ரூ. 2 லட்சம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உத்தர பிரதேச மாநிலத்திற்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அநீதியைக் கண்டித்து கர்நாடகா, கேரள அரசுகள் போராட்டம் அறிவித்தன.
அதன்படி நேற்று ஒன்றிய அரசை கண்டித்து கர்நாடக அரசு முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கேரள முதலமைச்சர், "நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மீறி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நிதி தடைகளை ஒன்றிய பா.ஜ.க அரசு ஏற்படுத்துகிறது. நிதி கூட்டாட்சி முறையை ஒன்றிய பா.ஜ.க அரசு சிதைக்கிறது.
செஸ் வரிகளில் ஒன்றிய அரசுக்கு ரூ. 2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. அதில் மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட வழங்குவதில்லை. ஜி.எஸ்.டி இழப்பீட்டையும் கடந்த ஆண்டோடு ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது." என தெரிவித்துள்ளார்.
அதேபோல் தமிழ்நாட்டை சேர்ந்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று கருப்புச் சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ”அரசியல் அமைப்பை சீர்குலைக்காதே’, ’தமிழ்நாட்டை வஞ்சிக்காதே’, ’வெள்ள நிவாரணத்தை வழங்கிடு’ போன்ற முழக்கங்களை எழுப்பினர். ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து தென்னிந்திய மாநிலங்கள் ஒரு வலுவான போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
Also Read
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
-
“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”
-
முதலமைச்சர் தொகுதியிலேயே... : பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!