Politics
தென்னிந்தியாவிற்கு வெறும் ரூ.2 லட்சம் கோடி: உபி-க்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடி -நிதி ஒதுக்கீட்டில் அநீதி!
இந்த ஆண்டு மே மாதத்தோடு ஒன்றிய அரசின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில் ஒன்றிய பா.ஜ.க அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
பின்னர் அடுத்தநாள் பிப்.1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் எந்த வித நல்ல திட்டங்களும் இல்லை, அறிவிப்புகளும் இல்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
வருமான வரி சலுகை, பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு போன்ற மக்களுக்கேற்ற எந்த வித அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மேலும், பாஜக பட்ஜெட்டில் கடுமையான நிதிப்பற்றாக்குறை இருக்கும் நிலையில், அரசு கூடுதலாகக் கடன் வாங்கவேண்டி இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் பா.ஜ.க ஆட்சி செய்யாத எதிர்க்கட்சி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு குறைவான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மொத்தமே வெறும் ரூ. 2 லட்சம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உத்தர பிரதேச மாநிலத்திற்கு மட்டும் ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாகவே ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கும் நிதியில் பாரபட்சம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இந்த இடைக்கால பட்ஜெட் அதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.
Also Read
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!
-
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் : ரூ.1000 கோடி நிதி - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்!
-
”நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பீகார் தேர்தலில் தேஜஸ்வி புகழாரம்!
-
ராணிப்பேட்டை - 72,880 நபர்களுக்கு ரூ.296 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!