Politics
சண்டிகர் தேர்தல் : உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஆம் ஆத்மி!
பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. அந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள், யூனியன் பிரதேசமான சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் என்பவர் போட்டியிட்டார்.
அதேபோல பாஜக சார்பில், மனோஜ் சோன்கர் என்பவர் போட்டியிட்டார். இந்த மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக கருத்துகள் வெளியானதையடுத்து, தோல்வி பயத்தில் 2 முறை மேயர் தேர்தலை ஒத்திவைத்தது. இதையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், இன்று மேயர் தேர்தல் நடைபெற்றது.
அதன்படி கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்ற இந்த தேர்தலில் 36 உறுப்பினர்களில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு 20 வாக்குகளும், பாஜகவுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெரும் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால், மொத்தம் பதிவான 36 வாக்குகள் பதிவான நிலையில், அதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த 8 வாக்குகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இதனால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கருக்கு 16 வாக்குகளும், இந்தியா கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமாருக்கு 12 வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், செல்லாதவை என அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளை தேர்தல் ஆணையர் திருத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனால் தேர்தல் ஆணையர் பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டார் என காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் விமர்சித்து வருகின்றது.
இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மேயர் தேர்தல் விவகாரம் குறித்தும், பாஜக வெற்றி செல்லாது என்று அறிவிக்குமாறும் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்த சூழலில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
Also Read
-
”பாஜகவின் ஊதுகுழலாக உள்ள பழனிசாமியை 2026ல் மக்கள் அடித்து விரட்டுவார்கள்” : அமைச்சர் ராஜேந்திரன் உறுதி!
-
மருத்துவ படிப்பில் சேர 72,743 பேர் விண்ணப்பம் : கலந்தாய்வு எப்போது?
-
”அமித்ஷாவின் மிரட்டலுக்கு பயந்து கிடக்கும் எடப்பாடி பயனிசாமி” : ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?