Politics
அடுக்கடுக்காக தடைகள்: மேற்கு வங்க அரசுக்கு எதிராக செயல்படும் ஒன்றிய அரசு!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA), மக்களவைத் தேர்தலுக்கு முன் நடைமுறைக்கு கொண்டு வர, தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது பாஜக. குறிப்பாக எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களிடையே புதிய கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு, தனி அடையாள அட்டைகளை வழங்கி வருகிறது தேசியக் குடியுரிமைப் பதிவேடு (NRC) குழு.
இதன் மூலம் ஜம்மு - காஷ்மீர் மக்கள் அச்சுறுத்தலை சந்தித்து வருகிற நிலையில், மேற்கு வங்கம் - வங்காளதேச எல்லையில் வாழும் இந்தியர்களுக்கும் அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இதற்கு விடை தரும் விதமாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “வங்காளதேச எல்லைக்கு அருகில் வாழும், இந்திய குடிமக்களுக்கு அடையாள அட்டை வழங்கி வருகின்றனர் எல்லை பாதுகாப்பு படையினர். அதனை யாரும் வாங்க வேண்டாம். எங்களிடம் வாக்காளர் அட்டை, ஆதார் போன்றவை உள்ளன என்று கூறி மறுத்துவிடுங்கள். CAA, NRC மூலம் குடியுரிமையை பறிப்பதற்கான முன்னெடுப்பு இது. இதனை எதிர்த்து புலி போல் சண்டையிட தயாராக உள்ளேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மணிப்பூரின் சிறுபான்மையினர், எல்லை பாதுகாப்பு படையினரால் (BSF) தாக்குதலுக்குள்ளாகி இறந்து வருகின்றனர். இது போன்ற நிகழ்வு, மேற்கு வங்கத்தில் ஏற்பட்டால், மேற்கு வங்க காவல்துறை BSF மீது வழக்கு பதிவு செய்து, உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் சிதால்குச்சி என்கிற இடத்தில் BSF படையினர், 4 உள்ளூர்காரர்களை சுட்டுக்கொன்றனர். எனினும், அவர்களுக்கு பிணை (bail) கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“மம்தாவால் ஒன்றும் செய்ய இயலாது. பிப்ரவரி இறுதிக்குள், CAA நடைமுறைப்படுத்தப்படும், ” என ஏளனமாக விடையளித்துள்ளார், மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி.
அதே வேளையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) மூலம், மேற்கு வங்கத்திற்கான நிதி இன்று வரை ஒதுக்கப்படாமல் உள்ளது. சுமார் 2 ஆண்டுகளாக நிலுவையிலுள்ள நிதி, வரும் பிப்ரவரி 1-க்குள் ஒதுக்கப்படவில்லையெனில், தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!