Politics

லாலு பிரசாத்திடம் 10 மணி நேரம் விசாரணை : அமலாக்கத்துறை அதிகாரிகள் செயலால் அதிர்ச்சி !

ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசை விமர்சிப்பவர்கள் மீதான அச்சுறுதல்களும், தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மோடி அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து மக்கள் விரோத நடவடிக்கை அதிகரித்துள்ளது

அதனை எதிர்ப்பவர்கள் மற்றும் அதற்கு எதிராக வலுவான போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வலதுசாரி அமைப்புகள் மற்றும் இந்துத்வா அமைப்புகள் அச்சுறுத்தியும் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர். அதோடு எதிர்க்கட்சியினர் மீது சிபிஐ மற்றும் அமலாக்க துறையினரை ஏவியும் பாஜக அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ளது.

அந்த வகையில் இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவரும், ராஷ்டீரிய ஜனதாதள நிறுவனருமான லாலு பிரசாத்திடம் 10 மணி நேரம் அமலாக்கதுறை விசாரணை நடத்தியுள்ளது. லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, அவர் சிலரிடமிருந்து நிலத்தை லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது.

அந்த புகாரின் அடிப்படையில், லாலுபிரசாத் , அவருடைய மனைவி, மகன், மகள் உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர்களிடம் ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அதே போல பாஜக ஆட்சிக்கு வந்ததும் அமலாக்கதுறையும் இந்த வழக்கில் லாலுபிரசாத்க்கு சம்மன் அனுப்பியது.

அதனைத் தொடர்ந்து, பாட்னா நகரில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்திற்கு லாலு பிரசாத் நேற்று காலை 11 மணிக்கு சென்ற அவரிடம் சுமார் 10 மணி நேரத்துக்கும் அதிக அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: "தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஸ்பெயின் முதலீட்டாளர்கள் மாநாடு அமைந்தது"- முதல்வர் கருத்து