Politics
“அவர் ஒரு நல்ல நடிகர்.. நமக்கு எல்லாம் பெருமை சேர்ப்பார்..” - பாஜக முதல்வரை கலாய்த்த முன்னாள் முதல்வர் !
தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுகிறது. இதில் மிசோரமில் ஒரே கட்டமாகவும், சத்தீஸ்கரில் முதற்கட்டமாக கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
தொடர்ந்து மீதமுள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அனைத்து கட்சியினரும் பிரசாரப் பேரணி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் தற்போதுள்ள பாஜகவை சேர்ந்த அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ஒரு நல்ல நடிகர் என்றும், அவர் முதல்வர் பதவியை இழந்த பிறகு நடிக்க சென்றுவிடுவார் என்றும், அம்மாநில முன்னாள் முதல்வர் கமல் நாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாகர் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் கமல் நாத் பேசியதாவது, "தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் செளகான், முதல்வர் பதவியில் இருந்து விரைவில் வெளியேறிவிடுவார். ஆனால் அதற்காக அவர் வேலையில்லாமல் எல்லாம் இருக்கமாட்டார். அவர் ஒரு சிறந்த நடிகர். எனவே மும்பைக்குச் சென்று நடிப்புத் தொழிலைத் தொடங்கி விடுவார். அப்படி நடித்து நமது மாநிலமான மத்தியப் பிரதேசத்தை பெருமைப்படுத்துவார்.
இன்று எங்கள் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்; எங்கள் விவசாயிகளுக்கு வேலை இல்லை. ஆனால் மாநில முதல்வர் சிவராஜ் சிங் அவர்களே உங்கள் சொத்து மதிப்பு என்ன? என்பதை தயவுசெய்து மக்களிடம் சொல்லுங்கள். நான் எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்து வருகிறேன். அப்போது சிலர் மத்தியப் பிரதேசத்தில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்றார்கள்.
ஆனால் இது அடிமைத்தனத்துக்கோ பொய்களுக்கோ நேரமில்லை. நவம்பர் 17ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் புதிய சகாப்தம் வரப் போகிறது. இப்போது மக்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நீங்கள் எனக்கோ, காங்கிரஸுக்கோ வாக்களிக்க வேண்டாம்; உண்மைக்கு வாக்களியுங்கள். இது மத்தியப் பிரதேசம் மற்றும் நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும்." என்றார்.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!