Politics
அரசியலை தலைகீழாக மாற்றிய ராகுலின் யாத்திரை: தெலங்கானாவை கைப்பற்றும் காங்கிரஸ்.. வெளியான கருத்து கணிப்பு !
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றிபெறும் என கூறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என சமீபத்தில் வெளியான Lok poll கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தெலங்கானாவில் சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ந் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வெளியான அங்கு பிக் டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் அங்கு முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
கருத்து கணிப்பு முடிவுகளில் காங்கிரஸ் கட்சிக்கு 62 முதல் 69 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், தற்போதைய ஆளும் கட்சியான பிஆர்எஸ் கட்சி 46 முதல் 54 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரம் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 5 முதல் 7 இடங்களிலும், பாஜக 3 முதல் 6 இடங்கள் மட்டுமே வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி பெரிதாக பேசப்படாத நிலையில், ராகுல் காந்தியின் யோடோ யாத்திரை தெலுங்கானாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தெலங்கானாவில் காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதிகள் அங்கு நிலைமையை தலைக்கீழாக மாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Also Read
-
“மாநில உரிமைகளை மதிக்கும் ஒரு அரசு, பழனிசாமி போல அமைதி காக்க முடியாது!” : அமைச்சர் ரகுபதி பதிலடி!
-
சென்னையில் 3.70 லட்சம் பேருக்கு உணவு! : வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்!
-
“சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தேவை!” : தயாநிதி மாறன் எம்.பி கோரிக்கை!
-
“இதுவரை 9.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்!” : நேரடி ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
“தந்தை பெரியாரின் இந்த புத்தகத்தை அனைத்து பெண்களும் படிக்க வேண்டும்!” : கனிமொழி எம்.பி பேச்சு!