Politics
வாக்குறுதிகளை நிறைவேற்றாத பாஜக.. தெலுங்கானா வந்த மோடிக்கு போஸ்டர் ஒட்டி பொதுமக்கள் எதிர்ப்பு !
ஆந்திர மாநிலத்தில் இருந்து 9 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது, அங்கு இந்த வருடன் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என சமீபத்திய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்த நிலையில், அங்கு எப்படியாவது சில இடங்களில் வெற்றிபெற வேண்டும் என பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக முக்கிய தலைவர்கள் தெலுங்கானாவுக்கு சுற்றுப்பயணம் செய்தவண்ணம் உள்ளனர்.
அந்த வகையில் மோடியும் தெலுங்கானாவுக்கு கடந்த சில மாதங்களில் பலமுறை சென்றுவந்தார். ஆனால், அங்கு பாஜகவின் வளர்ச்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், தற்போது அங்கு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை தொடங்கி வைக்க தெலுங்கானா வந்துள்ளார்.
ஆனால், தெலுங்கானா வந்துள்ள மோடிக்கு அந்த மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட நிலையில், அங்கு ஒன்றிய அரசு சார்பில் ஏராளமான வளர்ச்சி பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பாஜக ஆட்சியில் இருக்கும் 9 வருடங்களாக அங்கு எந்த வளர்ச்சி பணியும் மேற்கொள்ளவில்லை. மேலும், தெலுங்கானாவுக்கு சிறப்பு தகுதியையும் வழங்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இதன் காரணமாக தெலுங்கானா வந்துள்ள மோடிக்கு அங்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பல்வேறு இடங்களில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்களும், பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read
-
தவெக அமைச்சர்கள் கூட்டத்தில் சட்டென Power Cut... TENSION ஆன செங்கோட்டையன்!
-
BoyFriend உடன் சேர்ந்து Blackmail.. மிரட்டி பணம் பறிப்பு.. தவெக பிரமுகர், BIGG BOSS வர்ஷினி வெங்கட் கைது!
-
டம்மியின் இடைத்தேர்தல் பிரச்சார ஸ்கிரிப்ட் ரெடியா virtual abusers? : DMK IT WING கேள்வி!
-
மர்ம காய்ச்சலால் 1 வயது குழந்தைக்கு நேர்ந்த துயரம் : சோகத்தில் மூழ்கிய கிராமம்!
-
காலை உணவுத் திட்டம் : பல்லி விழுந்த சாப்பாடு.. தவெக அரசின் அலட்சியத்தால் 40 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!