Politics
G20 மாநாடு : அழைக்கப்படாத எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.. சர்ச்சையில் பாஜக அரசு !
ஆண்டுதோரும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படும். அந்த வகையில் இந்த முறை இந்த ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பு மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாட்டில் ஒன்றிய அரசு தீவிரமாக இறங்கி செயல்பட்டு வருகிறது. மேலும், டெல்லியின் முக்கிய இடங்களை அழகு படுத்தி வருகிறது.
இந்த மாநாட்டை ஒட்டி நாளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சார்பில் இரவு உணவு வழங்கப்படுகிறது. இண்டிகா விருந்தில் கலந்துகொள்ள வெளிநாட்டு தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கும், மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் இந்த விருதில் கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளனர். இது தவிர முன்னாள் பிரதமர்கள் இந்த விருந்து மன்மோகன் சிங், ஹெச்.டி.தேவகவுடா ஆகியோரும் அழைக்கப்பட்ட நிலையில், உடல்நலம் காரணமாக தேவகவுடா தான் அந்த விருந்தில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதை அலுவலகம் உறுதி செய்துள்ளார். ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!