Politics
ராகுல் Flying Kiss விவகாரம் : பாஜக எம்பி ஸ்மிருதி இரானிக்கு சரமாரி கேள்வியெழுப்பிய மகளிர் ஆணையத் தலைவர் !
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மோடி அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தது. இதன் மீதான விவாதம் தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் ராகுல் காந்தி எம்.பி மணிப்பூர் விவகாரம் குறித்து ஆக்ரோஷமாக அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி., என அடுத்தடுத்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் குற்றச்சாட்டுகளையும், கேள்விகளையும் முன்வைத்தனர். ஆனால் அதற்கு பதில் அளிக்க திணறிய பாஜகவினர் கத்தி கூச்சலிட்டனர். இருப்பினும் ராகுல் காந்தி தனது உரையை முழுமையாக முடித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதையடுத்து ராகுல் காந்தி பாஜக பெண் எம்.பி-க்களை நோக்கி Flying kiss கொடுப்பது போன்று செய்கையை செய்ததாக பாஜக எம்.பி. ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தொடர்ந்து இதுகுறித்து சபாநாயகருக்கும் கடிதம் எழுதி அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதே பாஜக எம்.பியான ஹேம மாலினியோ, ராகுல் காந்தி அவ்வாறு செய்ததாக தான் பார்க்கவில்லை என்று கூறினார். இதனால் பதில் கூற முடியாமல் பாஜக பெண் எம்.பிக்கள் இவ்வாறு ஒரு அப்பட்டமான போலி குற்றச்சாட்டை முன் வைப்பதாக இணையவாசிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் டெல்லி மகளிர் ஆணையத் தலைவரான ஸ்வாதி மாலிவால், ஸ்மிருதி இரானிக்கு கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "Flying Kiss விவகாரம் காற்றில் தீயாய் பரவிக்கொண்டிருக்கிறது. பிரிஜ் பூஷண் என்பவர் அங்கு இரண்டு வரிசைக்குப் பின்னால்தான் அமர்ந்திருந்தார்.
அவர், ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனைகளைத் தனது அறைக்கு அழைத்து இடுப்பில், மார்பில் கைவைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். ஆனால், அவர் செய்ததில் உங்களுக்கு ஏன் கோபம் வரவில்லை?" என்று ஸ்மிருதி இரானிக்கு கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!