Politics
உ.பி : ராமர் கோயில் கட்டப்படும் வார்டில் வென்ற இஸ்லாமியர். 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்ட பாஜக வேட்பாளர் !
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குஎண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில் இருந்த காங்கிரஸ் கட்சி இறுதியாக 136 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.அதேநேரம் ஆளும் பாஜக 65 இடங்களை மட்டுமே பிடித்து படுதோல்வி அடைந்துள்ளது.
அதே நேரம் உத்தரப்பிரதேச அயோத்தி மாநகராட்சிக்கு நடத்தப்பட்ட மேயர் தேர்தலில் பதிவான வாக்குகளும் நேற்று எண்ணப்பட்டன. இதில் ராமர் கோயில் கட்டப்படும் இடத்துக்கு அருகில் உள்ள வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட இஸ்லாமியர் ஒருவர் வெற்றிபெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கு ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், அதற்கு பின்னர் இருக்கும் இடத்துக்கு ராம ஜென்ம பூமி கோயில் இயக்கதை நினைவூகூரும் வகையில் ராம் அபிராம் தாஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டில் 440 இஸ்லாமியர்களும் 3,844 இந்துக்களும் உள்ள நிலையில், அங்கு தற்போது நடைபெற்றுள்ள தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட சுல்தான் அன்சாரி என்பவர் 996 வாக்குகளோடு 42 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அதே நேரம் பெரும் நம்பிக்கையோடு அந்த வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த வெற்றி பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் அனுமாரை வைத்து பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்த நிலையில், அது தோல்வியைத் தழுவிய நிலையில், தற்போது ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் இடத்திலும் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது.
Also Read
-
"கனமழையை சமாளிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி!
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !