Politics

EMERGENCY DOOR-ஐ திறந்த விவகாரம்.. அண்ணாமலையோடு சர்ச்சையில் சிக்கிய இளம் தலைவர்.. புறக்கணித்த பாஜக !

கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற பாஜக இளைஞர் அணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாஜக தலைவர் அண்ணாமலையும், அக்கட்சியின் இளைஞர் அணி நிர்வாகி தேஜஸ்வி சூர்யாவும் விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். அப்போது விமானத்தில் ஏறிய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் விமானம் புறப்படும் நேரத்தில் 'எமர்ஜென்சி' கதவிற்கான பட்டனை அழுத்தி விளையாட்டு காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், பயணிகள் அச்சமடைந்ததோடு மட்டுமின்றி, விமானத்தில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு மீண்டும் விமானத்தை சோதனை செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் 3 மணி நேரம் விமானம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து நடந்த சம்பவத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு சென்றதாக செய்திகள் வெளியாகின.

அதைத் தொடர்ந்து விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும்தேஜஸ்வி சூர்யா ஆகியோர் திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானத்தில் எமர்ஜென்சி வழியை திறந்தது இளைஞர் அணி நிர்வாகி தேஜஸ்வி சூர்யாதான் என்றும் அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார். இந்த விவகாரம் பெரிதான நிலையில் , எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரத்தில் பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா, தனது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளதாக விமான போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் . இந்த விவகாரம் ஊடகங்களில் வெளிவந்த நிலையில், "தவறுதலாகவே எமர்ஜென்சி கதவை திறந்துள்ளார் என்றும், தனது செயலுக்கு தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கோரிவிட்டார் என்றும் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மும்முரமாகியுள்ள நிலையில், பாஜக சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் கர்நாடகாவின் முக்கிய தலைவரும் அண்ணாமலையுடன் எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான தேஜஸ்வி சூர்யா புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

சமீப சில ஆண்டுகளாக கர்நாடகா பாஜக வின் எதிர்கால தலைவராக தேஜஸ்வி சூர்யா விளம்பரப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "சட்டத்தை மீறிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” -நிர்மலா சீதாராமனுக்கு திமுக MP கடிதம் !