Politics
கர்நாடக முதல்வர் 1500 கோடி ஊழல் செய்தார்.. சொந்த கட்சி MLA-வின் புகாரால் அதிர்ச்சியில் பாஜக தொண்டர்கள் !
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் சில நாட்களில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
சில நாட்களுக்கு முன்னர் கர்நாடகத்தைச் சேர்ந்த கூட்டுறவு வங்கிகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் வந்த நிலையில், வருமான வரி அதிகாரிகள் வங்கிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
16 இடங்களில் நடந்த இந்த சோதனையில் மோசடி தொடர்பான ஆவணங்கள், கணக்கில் வராத பணம் ரூ.3.3 கோடி கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளும் வருமான வரித்துறை சோதனைகளில் கைப்பற்றப்பட்ட நிலையில், இந்த மோசடியில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பெயர்கள் சிக்கியுள்ளது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை தனது சொந்த தொகுதியில் 1500 கோடி ரூபாய் நீர் பாசனத்துறையில் ஊழல் செய்துள்ளார் என பாஜக எம்.எல்.ஏ புகார் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாவேரி தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் நேரு வலேக்கார். இவருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கவில்லை.
இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அவர், முதல்வர் பசவராஜ் பொம்மை மீது ந்த தொகுதியில் 1500 கோடி ரூபாய் நீர் பாசனத்துறையில் ஊழல் செய்துள்ளதாக கடும் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளது. மேலும், அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என்றும் பாஜக மேலிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே கர்நாடகாவில் பாஜக பின்னடைவு சந்தித்து வரும் நிலையில், சொந்த கட்சி எம்.எல்.ஏவின் இந்த ஊழல் குற்றச்சாட்டு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!