Politics
”பாஜக ஆட்சியில் 5,415 கலவரங்கள் நடந்துள்ளது” -அமித்ஷாவின் கருத்துக்கு கபில்சிபல் பதிலடி !
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பாஜக இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு ராம நவமி ஊர்வலத்தின் போது உத்தர பிரதேசத்தில் மசூதிக்கு வெளியே இருந்த கடைகளில் ஏறிய சிலர் அங்கு காவி கொடிகளை கட்டி வன்முறையை தூண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து பிஹாரில் நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட்டு மதரஸாவுக்கு தீ வைத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த வன்முறையில் பலர் காயமடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த கலவரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னதாக அமித் ஷாவின் பேச்சை தற்போது பாஜகவினர் பரப்பி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் பீகார் வந்த அமித் ஷா, ”பீகாரில் 40-க்கு 40 நாடளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெறவும், 2025-ம் ஆண்டு மாநில தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கவும் உதவி செய்யுங்கள்... அதற்கு பிறகு, இங்கு கலவரக்காரர்களை ஒடுக்கி, மாநிலத்தின் நிலைமையே தலைகீழாக மாற்றப்படும்... பாஜக ஆட்சியில் ஒருபோதும் கலவரங்கள் நடைபெறாது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு மாநிலங்களவை உறுப்பினர் கபில்சிபல் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”2014 - 2020 ஆண்டுகளுக்கு இடையில் 5,415 கலவரங்கள் நடந்துள்ளதாக என்சிபிஆர் மூலம் தகவல் மூலம் தெரியவருகிறது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2019-ம் ஆண்டு மட்டும் 9 கலவரங்கள் நடந்திருக்கின்றன.. அதேபோல மகாராஷ்டிராவில் 4, மத்தியப்பிரதேசத்தில் 2 என்று கிட்டத்தட்ட 25 வகுப்புவாத கலவரங்கள் நடந்துள்ளன. குஜராத், மத்தியப் பிரதேசத்திலும் கலவரங்கள் நடந்துள்ளன. ஆனால் இதை எல்லாம் பார்த்து மோடி அமைதியாக இருக்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!