Politics
கர்நாடகாவில் அடுத்து காங்கிரஸ் ஆட்சி.. செல்வாக்கை இழக்கும் பாஜக.. வெளிவந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் !
கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் இந்த ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
அங்கு இந்த ஆண்டோடு சட்டமன்றத்தின் பதவி காலம் வரும் மே மாதத்தோடு முடிவுக்குவரும் நிலையில், அங்கு மே 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் ஓட்டு எண்ணிக்கை மே 10-ம் தேதியும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறும் என முன்னர் கருத்து கணிப்புகள் வெளியான நிலையில், தற்போது வெளியான புதிய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது.
ஏபிபி - சி வோட்டர் சார்பில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் காங்கிரஸ் கட்சி 115-127 இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியமைக்கும் என்றும், இந்த முறை பாஜகவுக்கு 68-80 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 23-35 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் தான் ஆட்சியில் உள்ள ஒரே மாநிலத்திலும் ஆட்சியை பாஜக பறிகொடுக்கவுள்ளது தெரியவந்துள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், காங்கிரஸ் வெற்றி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க-விற்கு ஒரு MP சீட் ஒதுக்கீடு!
-
மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம்” : 5 முக்கிய அம்சங்கள் என்ன?
-
ஒன்றிய - மாநில உறவு : தமிழ்நாட்டின் குரலுக்கு ஆதரவு தந்த CM சித்தராமையா - நன்றி சொன்ன CM MK Stalin!
-
தென் இந்தியாவிலேயே முதன் முறை... சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்!
-
இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!