Politics
சீனாவிலும் பட்டொளி வீசி பறக்கும் உதயசூரியன்.. எங்கு சென்றாலும் கொள்கை மாறாத உடன்பிறப்புகள்.. (VIDEO )
பழங்காலம் முதலே அறிவியலிலும், கல்வியிலும், மருத்துவத்திலும் புகழ்பெற்று திகழ்ந்தது தமிழ்நாடு. மேல்நாட்டினர் எழுத்தை உருவாக்கிக்கொண்டிருந்த நாளில் நாம் இங்கு அழியாபுகழ்பெற்ற இலக்கியங்களையும், பெருங்காப்பியங்களையும் உருவாக்கிக்கொண்டிருந்தோம்.
ஆனால், அதன்பின்னர் சனாதனத்தின் கோர பிடியில் சிக்கிய தமிழ்நாடு தனது பழம்பெருமையை இழக்கத்தொடங்கியது. கல்வியில் சிறந்த பலர் இருந்த தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தினரே கல்வி கற்க வேண்டும், இந்த சமூகத்தில் பிறந்தால் இந்த வேலையே செய்யவேண்டும் போன்ற சனாதன கொள்கைகள் தமிழ்நாட்டில் நுழைந்து தமிழ்நாட்டையே சிதைத்தது.
அதன்பின்னர் பார்ப்பனர் அல்லாத தலைவர்கள் நீதிக்கட்சி என்ற அரசியல் கட்சியை உருவாக்கி தமிழ்நாட்டில் அதிகாரத்தில் வந்து தமிழர் இழந்த உரிமைகளை ஒவ்வொன்றாக பெற்றுக்கொடுத்தனர். அதேநேரம் நீதிக்கட்சியின் முகமாக மாறிய பெரியார் 'திராவிடர் கழகம்' என பெயர்மாற்றம் செய்து பொதுமக்களிடையே இருந்த சனாதன கொள்கையை தகர்ப்பதே தனது லட்சியமாக கொண்டு வாழ்ந்தார்.
அவரின் தளபதியாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என்ற அரசியல் கட்சியை உருவாக்கி பெரியாரின் கொள்கைகளை சட்டமாக மாற்றும் முயற்சியில் இறங்கினார். அண்ணாவுக்கு பிறகு கலைஞரின் தலைமையில் திமுக பெரியாரின் கொள்கைகள் பலவற்றை நிறைவேற்றி தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்றியது.
கலைஞரின் காலத்துக்கு பிறகு அவரின் மகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து தமிழ்நாட்டை இந்தியாவே பொறாமைப்பட்டு பார்க்கும் உயர்ந்த மாநிலமாக முன்னேற்றி வருகிறார். இப்படி வழிவழியாக வந்த திமுகவின் உறுதியான அஸ்திவாரமாக அதன் உடன்பிறப்புகள் திகழ்ந்து வருகின்றனர். தலைமுறை தலைமுறையாக கழகத்துக்கு தொண்டாற்றும் கோடிக்கணக்கான தொண்டர்கள் காரணமாகவே திமுக தற்போதுவரை உறுதியாக நின்று வருகிறது.
அந்த வகையில் சீனா நாட்டுக்கு சென்று அங்கு உணவகத்தை நடத்திவரும் திமுகவின் தொண்டர் ஒருவர் தனது உணவகத்தில் அண்ணா,கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படத்தை வைத்து கழகத்தின் புகழை சீனாவரை பரப்பி வருகிறார். இது தொடர்பாக பேசிய அவர் "நான் பிறந்ததில் இருந்தே திமுக காரன்தான், எனது அப்பா அண்ணா காலத்தில் இருந்தே திமுகவில் இருந்தார். நானும் இப்போதுவரை கழகத்தின் கொள்கைகளை பின்பற்றி வருகிறேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
-
“தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!” : முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !
-
கச்சத்தீவு விவகாரம் : “இலங்கை அதிபரின் பேச்சு, இருநாட்டு உறவுக்கு எதிரானது” - CPI முத்தரசன் கண்டனம்!