Politics

"அண்ணாமலை,தேஜஸ்வி ஆகியோர் தீவிரவாதிகளா என விசாரணை நடைபெற்றது -நேரில் பார்த்தவர் கூறிய அதிர்ச்சி தகவல்!

கடந்த டிசம்பர் 10-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற பாஜக இளைஞர் அணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின் பாஜக தலைவர் அண்ணாமலையும், அக்கட்சியின் இளைஞர் அணி நிர்வாகி தேஜஸ்வி சூர்யாவும் விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர். அப்போது விமானத்தில் ஏறிய அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா ஆகியோர் விமானம் புறப்படும் நேரத்தில் 'எமர்ஜென்சி' கதவிற்கான பட்டனை அழுத்தி விளையாட்டு காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், பயணிகள் அச்சமடைந்ததோடு மட்டுமின்றி, விமானத்தில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு மீண்டும் விமானத்தை சோதனை செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் 3 மணி நேரம் விமானம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றதாக தெரிகிறது. இதையடுத்து நடந்த சம்பவத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு சென்றதாக செய்திகள் வெளியாகின.அதைத் தொடர்ந்து விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும்தேஜஸ்வி சூர்யா ஆகியோர் திறந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானத்தில் எமர்ஜென்சி வழியை திறந்தது இளைஞர் அணி நிர்வாகி தேஜஸ்வி சூர்யாதான் என்றும் அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார் என்பதை உறுதிப்படுத்தியிருந்தார். இந்த விவகாரம் பெரிதான நிலையில் , எமர்ஜென்சி கதவை திறந்த விவகாரத்தில் பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா, தனது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளதாக விமான போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் . இந்த விவகாரம் ஊடகங்களில் வெளிவந்த நிலையில், "தவறுதலாகவே எமர்ஜென்சி கதவை திறந்துள்ளார் என்றும், தனது செயலுக்கு தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கோரிவிட்டார் என்றும் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "தேஜஸ்வி விமானக் கதவை திறக்கவில்லை, அவர் படித்தவர். விமானத்தின் அவசரக் கதவில் ஒரு இடைவெளி இருந்தது. அதைப் பார்த்து தேஜஸ்விதான் விமானக் குழுவிடம் கூறினார். நானும் இடைவெளி இருப்பதைப் பார்த்தேன். இதையடுத்து பயணிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு சோதனைகள் நடந்தன. தவறு செய்ததாக அவர் மன்னிப்பு கோரவில்லை. அவர் மீது தவறு இல்லாதபோதும், எம்.பி என்ற ஒரு பொறுப்பில் இருப்பதால் அவர் மன்னிப்பு கேட்டார்" என்று கூறியுள்ளார். தேஜஸ்வி யாதவே நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ள நிலையில், அண்ணாமலையின் இந்த பேச்சை பெரிய உருட்டு என சமூக வலைதள வாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த விமானத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக அதே விமானத்தில் பயணம் செய்த ஒருவர் நடந்த சம்பவம் குறித்து விவரம் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “காலை பத்து மணிக்கு திருச்சிக்கு செல்லும் விமானத்தில் விமான சிப்பந்திகள் பயணிகளிடமும், ஏதேனும் விபத்து நேரிட்டால் எமெர்ஜென்சி கதவை எப்படித் திறப்பது என விளக்கினார்கள். ‘முதலில் ஒரு பாக்ஸ். அதன் பிறகு ஒரு ஹேண்டில். இரண்டையும் திறந்து ஹேண்டிலை இழுத்துவிட்டால் எமெர்ஜென்சி கதவு கையோடு வந்துவிடும். அதன் மூலம் வெளியேறலாம்’ என ஏர் ஹோஸ்டஸ் விளக்கிவிட்டு பின்பக்கமுள்ள கதவுகளை மூடிவிட்டனர்.

பயணிகள் வருகை முடிந்துவிட்டதால் விமானம் நகர்வதற்கு பெரிய ஒலியுடன் கூடிய எஞ்சின் இயக்கப்பட்டது. விமானம் புறப்படும் என நாங்கள் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், விமானப் பணிப்பெண்கள் பைலட் அறையை நோக்கி ஓடினார்கள். திடீரென விமானத்திற்குள் போலீசார் திபுதிபுவென நுழைந்தார்கள். “விமானத்தில் பெரிய லீக் இருக்கிறது என பைலட்டின் கம்ப்யூட்டர் தெரிவிக்கிறது. எனவே இந்த விமானத்தை இயக்க முடியாது அந்த லீக்கேஜ் சரி செய்யப்படுமா? அல்லது வேறொரு விமானத்தில் பயணிகள் அமர வைக்கப்படுவார்களா? என்பதை இண்டிகோ விமான நிறுவனம் முடிவு செய்யும்’’ என விமானப் பணிப்பெண் அறிவித்தார்.

விமானத்திற்குள் வந்த போலீசார் எமர்ஜென்சி கதவு அருகே இருந்த அண்ணாமலையையும், தேஜஸ்வி சூர்யாவையும் அவருடன் இருந்த பா.ஜ.க.வினரையும் தனியாக ஒரு பேருந்தில் விமான நிலையத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். நான் உட்பட மற்ற பயணிகளை வேறொரு பேருந்தில் அமர வைத்து எங்களுக்கு ஸ்நாக்ஸ் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ் கொடுத்தார்கள். அப்பொழுதுதான் அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் சேர்ந்து எமெர்ஜென்சி கதவைத் திறந்து அலேக்காக அந்தக் கதவைப் பெயர்த்தெடுத்ததால் ஏற்பட்ட லீக்கேஜை பைலட் கண்டுபிடித்துவிட்டார். அவர் அதைக் கண்டுபிடித்திருக்காவிட்டால் விமானம் பறந்திருக்கும். நேபாள நாட்டில் விபத்துக்குள்ளான விமானம் போல பயணிகள் 76 பேரும் இறந்திருப்போம். விமானியின் சாமர்த்தியத்தால் அண்ணாமலை அன் கோ செய்த வேலை கண்டுபிடிக்கப்பட்டது. பத்து மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாகி, பதினொன்றரை மணிக்கு புறப்பட்டது.

விமானத்தைச் சுற்றித் தீயணைப்பு வண்டிகள் உட்பட அனைத்து அவசரக்கால வண்டிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. விமானப் பொறியாளர்கள் அங்குலம் அங்குலமாக விமானத்தை சோதித்தார்கள். தேஜஸ்வி சூர்யாவும், அண்ணாமலையும் எதற்காக விமானத்தின் எமெர்ஜென்சி கதவைத் திறந்தார்கள்? அவர்கள் தீவிரவாதிகளா? என தனியாக விசாரணை செய்தார்கள். அதன் பிறகு அவர்களது இருக்கைகள் மாற்றப்பட்டன. விமானம் புறப்பட்டுச் சென்றது” என்று கூறியுள்ளார்.

Also Read: தடையை மீறி ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் திரையிடப்பட்ட BBC-யின் ஆவணப்படம்.. பாஜக மாணவர் அமைப்பு எதிர்ப்பு !