Politics

“அதிபர் ஆட்சி நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே RSS திட்டம்..” : BJP முகத்திரையை கிழித்த முத்தரசன் !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த பா.ஜீவானந்தத்தின் 60 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காசிமேட்டில் உள்ள அவரது நினைவிடத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன். மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன்,“ வகுப்பு வாதம் தலைநோக்கி நிற்கிறது. நாட்டையே கபலிகரம் செய்கின்ற அனைத்து முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்லி, ஒரு நாட்டையே அதிபர் ஆட்சி முறைக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்கிறார்கள்.

முத்தரசன்

மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், கடவுளின் பெயரால், மொழியின் பெயரால், நாட்டு மக்களை பிளவுபடுத்தி தங்களுடைய சுயநலக் கொள்கையை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். இதற்கெல்லாம் எதிர்த்து நின்று போராடியவர் மாபெரும் தலைவர் ஜீவா. அவருடைய நினைவு நாளில் வகுப்புவாத பேராபத்தை முறியடிக்க அனைவரும் சபதம் ஏற்போம் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று அ.தி.மு.க ஆதரிப்பது ஆச்சரியமல்ல. எடப்பாடி பழனிச்சாமி 2024 சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் வந்தால் நல்லது. நாம் ஆட்சிக்கு வந்து விடலாம் எனக் குறுகிய சிந்தனை உடன் செயல்படுகிறார்.

தவறான சிந்தனை அவரது சொல்லியிருக்கிற கருத்து அவருடைய கட்சிக்கு கொள்கைக்கு புறமானது. ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கையை அவர்கள் தலைவராக போற்றுகின்ற ஜெயலலிதா கூட ஏற்றுக் கொள்ளவில்லை.

குறிப்பிட்ட காலம் வரையில் ஒன்றியத்தில் நிலையான ஆட்சி இருந்தது. அதற்குப் பிறகு 77 பிறகு 5 ஆண்டு காலம் நீடிக்க வில்லை. மொராய் தேசாய் , வி.பி சிங், சந்திரசேகர் ,குஜரால் உள்ளிட்டவர்கள் பிரதமர் ஆனார்கள், ஆனால் ஐந்து ஆண்டு காலம் ஆட்சி செய்தார்களா?

இப்படி எத்தனையோ முறை ஒன்றிய அரசு கலைத்துவிட்டு திரும்பத் திரும்ப தேர்தல் நடத்துவதற்கு உண்டான கட்டாயத்திற்கு நமது நாடு உள்ளாகி இருக்கிறது. ஆகவே ஒரு மிகப்பெரிய சிறந்த ஜனநாயக நாட்டில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது உள்நோக்கம் உடையது. ஆர்.எஸ்.எஸ் பொருத்தமட்டில் மாநிலங்கள் கூடாது. ஒரே நாடாக இருக்க வேண்டும்.

அது அதிபர் ஆட்சி கொண்ட நாடாக இருக்க வேண்டும். ஒரு கட்சி ஆட்சியாக இருக்க வேண்டும் . இதுதான் ஆர்.எஸ்.எஸ் கொள்கை. அதனை படிப்படியாக மெல்ல மெல்ல அமல்படுத்துவதற்கு உண்டான அனைத்து சாகசங்களையும் பாஜக மேற்கொள்கிறது.

சாகசங்களை இந்திய நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள் முறியடிப்பார்கள். ஆளுநர் ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார் மதசார்பின்மை கொள்கைக்கு எதிராக செயல்படுகிறார் தமிழ்நாடு என்கின்ற பெயருக்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநர் ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் ஆளுநர் பதவியை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “இந்தியாவில் ஏழை - பணக்காரர் இடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டது” : மோடி அரசை வெளுத்து வாங்கிய காங்கிரஸ்!