Politics
“நீங்கள் ஒரு அரசியல் வியாபாரி.. நீதி கிடைக்குமா மிஸ்டர் அமித் ஷா?” - சரமாரியாக விமர்சித்த சித்தராமையா !
கர்நாடக மாநிலத்தில் தற்போது பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்தராமையா இருந்து வருகிறார். இந்த நிலையில், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக விமர்சித்துள்ளது.
6 பகுதியாக பதிவிட்ட அந்த ட்விட்டர் பதிவில், "முதலமைச்சர் பதவியை 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வைத்துள்ள அரசியல் வியாபாரி அமித்ஷா, காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பது வேடிக்கையாக இருக்கிறது.
ஆட்சேர்ப்பு, இடமாறுதல், பதவி உயர்வு, மானிய ஒதுக்கீடு, பணிகளைச் செயல்படுத்துதல், பில் கொடுப்பது என கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டம் வரை 40% கமிஷன் பெற்ற தலைவர்களின் (அமித்ஷா, ஊழலைப் பற்றி பேசும் போது) பாசாங்குத்தனத்தை பாராட்டியே ஆக வேண்டும்.
ஆபரேஷன் கமல் (தாமரை) என்ற பெயரில் இம்மாநிலத்தில் நெறிமுறையற்ற அரசு அமைந்த நாள் முதல் ஏழைகளுக்கு மரணமும், ஊழல்வாதிகளுக்கு செல்வமும் வந்தது. விதான சவுதாவே கமிஷன் சாலையாக மாறிவிட்டது. இதில் உங்கள் பங்கு 40% தானே அமித்ஷா?
பெல்காமின் சந்தோஷ் பாட்டீல் முதல் தேவராயனதுர்காவைச் சேர்ந்த டி.என்.பிரசாத் வரை கர்நாடக அரசின் 40% கமிஷன் தொல்லையால் பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களின் தொடர் தற்கொலைகள் நிற்கவில்லை. இந்த மரணங்களுக்கு நீதி கிடைக்குமா மிஸ்டர் அமித் ஷா?
ஜிஎஸ்டி இழப்பீட்டில் கர்நாடகாவின் பங்கு முழுமையாக வரவில்லை; ஒன்றிய அரசு வழங்கும் திட்டங்களுக்கு மானியம் விடுவிக்கப்படவில்லை; அதிக மழை, வறட்சி, பயிர் சேதம் ஆகியவற்றுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. கர்நாடக பாஜக அரசின் 40% கமிஷனில் உங்கள் பங்கு தவறாமல் கொடுக்கப்படுகிறதா அமித்ஷா?
கொரோனா காலத்தில், உங்களுடைய அரசாங்க அமைச்சர் கமிஷனால் திணறினார். ஆக்சிஜன், படுக்கை, வென்டிலேட்டர் கிடைக்காமல் அப்பாவி மக்கள் வீதியில் மடிந்தனர். ஆனால் நீங்களோ மக்களை ஒரு குரங்கு போல் தட்டை (plate) தட்ட சொன்னீர்கள். இதை மாநில மக்கள் மறக்கவில்லை" என்று குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடகாவிற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசிய கருத்துக்களுக்கு தற்போது சித்தராமையா ட்விட்டர் வாயிலாக பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!