Politics

8 ஆண்டில் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு பொதுத்துறை பங்குகள் விற்பனை.. தனியாருக்கு தாரைவார்த்த மோடி அரசு !

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் வகையில், அரசு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது, ஒட்டுமொத்தமாக தனியார் வசம் ஒப்படைப்பது என பல்வேறு வகையில் தனியார்மயமாக்கலை ஊக்குவித்து வருகிறது மோடி அரசு.

குறிப்பாக, பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலமாக 2.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப் போவதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். அரசுக்கு இருக்கும் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை தங்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள்.

இதன் தொடக்கமாக கடந்த 2021 பிப்ரவரி 1 ஆம் நாள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசிடம் உள்ள எல்.ஐ.சி.யின் 100 சதவிகிதப் பங்குகளின் ஒரு பகுதியை தனியாருக்கு விற்கப் போவதாக அறிவித்தார்.

அதன்படி, அரசிடம் இருந்த 4.99 சதவிகித பங்குகள் விற்கப்பட்டது. இந்த பங்கு விற்பனையை தொடர்ந்து எல்.ஐ.சி பங்குகள் கடுமையாக சரிந்ததன் காரணமாக இரண்டே மாதத்தில் ரூ.1.2 லட்சம் கோடியை எல்.ஐ.சி நிறுவனம் இழந்தது.இது தவிர ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தனியார் மயமாகியுள்ளது.

இந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் அரசு ரூ.4.04 லட்சம் கோடிக்கு மேல் திரட்டியுள்ளது நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. இது தவிர மேலும் அதிக அளவு பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்து வருவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

Also Read: "ரொனால்டோவின் ஆணவத்தால் தான் போர்ச்சுகல் அணி தோற்றது" -உலகக்கோப்பை வென்ற முன்னாள் வீரர் விமர்சனம் !