Politics
“அண்ணாமலை புளுகு 8 மணி நேரம் கூட தாக்கு பிடிக்கல..” -பிரதமர் குறித்த பொய்யான புகாருக்கு KS அழகிரி தாக்கு!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "4 மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் பொது தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வருகை தந்தார்.
அப்போது உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன? பிரதமர் வருகையின் போது, மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளில் குறைபாடு இருந்துள்ளது. இதற்கு யார் காரணமோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஆளுநரிடம் மனு அளித்திருந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபு, "பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்தபோது, எந்தவிதமான பாதுகாப்பு குளறுபடியும் ஏற்படவில்லை. நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் சரியான முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் காவல்துறைக்கு வழங்கும் உபகரணங்கள் தரமானதாக உள்ளது.
தமிழகத்தில் காவல்துறைக்கு வழங்கும் உபகரணங்கள் தரமானதாக உள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பு உபகரணங்கள் தணிக்கை செய்யப்படுகிறது. உபயோகமில்லாத உபகரணங்கள் உடனடியாக தவிர்க்கப்படுகிறது. மற்ற மாநிலங்கள் தமிழ்நாடு காவல்துறையிடம் உபகரணங்கள் கேட்டு வாங்கும் அளவுக்கு தரமாக உள்ளது" என்று கூறினார்.
இந்த நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அண்ணாமலையின் போலியான குற்றச்சாட்டை தனது சமூக வலைதள வாயிலாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க வந்த மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்காததாக மத்திய பாதுகாப்பு ஏஜென்சி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியதாக ஒரு பொய்யான தகவலை அண்ணாமலை கூறி வருகிறார்.. DGP சைலேந்திர பாபு அவர்களும் அது போன்ற எந்த கடிதமும் வரவில்லை என மறுத்திருக்கிறார்
மோடி வந்து சென்ற 4 மாதங்களுக்குப் பிறகு திடீர் ஞானோதயம் ஏற்பட்டு நடவடிக்கை எடுக்க ஆளுநரை சந்தித்து தன் மலிவான அரசியலை அரங்கேற்ற முயற்சிக்கிறார் அண்ணாமலை. கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு என்பது போல அண்ணாமலையின் புளுகு 8 மணி நேரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை." என குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!