Politics
மாநில உரிமைகளைப் பறிக்கும் ஆளுநரின் செயல் கூட்டாட்சி முறைக்கு ஏற்றதல்ல - திமுக IT செயலாளர் T.R.B.ராஜா !
தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் (Union of States) என்பதை அரசியல் சட்டம் தெளிவாக வரையறை செய்துள்ளது. கூட்டாட்சித் தத்துவத்தின்படி ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் தமக்கான அதிகாரங்களைத் தனித்தனியே கொண்டவையாகும். எனினும், ஒன்றிய அரசின் அதிகாரக்கரங்கள், மாநிலத்தின் அதிகாரத்தட்டில் உள்ளவற்றை அள்ளி தன் தட்டில் போட்டுக் கொள்வது இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு எதிரான வலிமையான மாநில சுயாட்சிக் குரலை எப்போதும் முழங்கி வருகின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
நாடாளுமன்றத்தின் மாநிவங்களவையில் பேரறிஞர் அண்ணா தொடங்கி வைத்த அந்த முழக்கம், முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியில் சட்டமன்றத்தில் மாநில சுயாட்சித் தீர்மானமாக நிறைவேறியது. இன்றைய கழகத் தலைவர் மக்கள் போற்றும் நம் முதலமைச்சர் அவர்களால் இந்திய அளவில் அந்த முழக்கம் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசின் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக சில மாதங்களுக்கு முன் சென்னையில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னிலையில், மாநிலத்தின் தேவைகளையும், மாநிலத் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதையும், ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும் எனவும் எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. நிலு வைத் தொகையில் ஒரு பகுதி தமிழ்நாட்டிற்கும் மற்ற மாநிலங்களுக்கும் கிடைத்தது.
பிரதமரை தமிழ்நாட் டிலோ டெல்லியிலோ சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மாநில உரிமைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36வது பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் முதலமைச்சர் அவர்களும் பங்கற்ற அந்த நிகழ்வில், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்த மாக வலியுறுத்தியிருக்கிறார்.
உயர்கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு!
தமிழ்நாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் 22 பல்கலைக்கழகங்கள் உள்ள நிலையில், இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்பதைப் பெருமையுடன் எடுத்துரைத்த நமது முதலமைச்சர் அவர்கள், இது போன்ற மாநில அரசின் முயற்சிகளை ஆதரித்து ஊக்கமளிக்கும் வகையில், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார். மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, நெருக்கடி நிலைக் காலத்தில் ஒன்றிய அரசினால் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார் நம் கழகத் தலைவர்.
பொதுப் பட்டியலுக்கு கொண்டு சென்று, ' நாய் பெற்ற தெங்கம் பழம் - போல வீணடிக்கப்படுகிறது கல்வி முறை. மாநிலங்களிடமிருந்து கல்வி உரிமை பறிக்கப்பட்டதன் விளைவாகத்தான், பல்கலைக்கழக வேந்தர்கள் என்ற பெயரில் ஆளுநர்கள் தங்கள் அதிகார வரம்புகளை மீறி கல்வித்துறையில் குழப்பங்களை உருவாக்கி வருகிறார்கள். மாநில அரசுகளுடன் வேந்தர்கள் மோதல் போக்கை மேற் கொண்டு வருகிறார்கள். குறிப்பாக, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இந்தப் போக்கு மிக அதிகமாக இருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்கும் அவசர சட்டம் கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாட்டிலும் மாநில அரசின் கல்வி உரிமைகளைப் பாதுகாக்கவும், உயர்கல்வியில் மேலும் சிறந்து விளங்கவும் ஆளுநரை வேந்தர் பதவியி லிருந்து அகற்றிவிட்டு, முதலமைச்சரை வேந்தராகக் கொண்டு பல்கலைக்கழ கங்கள் செயல்பட சட்டமுன்வடிவு கொண்டு வரப் பட்டுள்ளது. அதுவும்கூட ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலையில் இருப்பதுதான் ஜனநாயக விநோதம்.
இதுதான் திராவிட மாடல்!
காந்தி கிராம பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர், கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையே வித்தியாசம் இருக்கலாம். ஆனால், ஏற்றத்தாழ்வு இருக்கக்கூடாது என்று தெரிவித்திருப்பதுடன் கிராமப்புற மேம்பாட்டுக் காக குடிநீர் வசதி, மின்இ ணைப்பு, வீடு கட்டும் திட்டங்களை செயல்படுத்துவதாகக் கூறியுள்ளார். இவற்றை 1970களிலேயே கிராமப்புறங்களுக்கு வழங்கிய முன்னோடி மாநிலம், முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சி செய்த தமிழ்நாடு தான். கிராமப்புற மக்களுக்கு வீடு, தரமான சாலை, மின் இணைப்பு, போக்குவரத்து, கல்விநிலையங்கள் உள்ளிட்ட கட் டமைப்புகள் முதல் பொது விநியோகத் திட்டம், சமையல் எரிவாயு உருளை, இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி, மினி பஸ், இலவச பஸ் பாஸ், உழவர் சந்தை, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என அனைத்து விதமான வசதிகளையும் உருவாக் கித் தந்தது தி.மு.கழக அரசு. அவற்றைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார் நமது முதலமைச்சர் அவர்கள். இது தான் திராவிட மாடல்.அரசியல் சட்டம் வழங் கியுள்ள மாநில உரிமைகளை நிலைநாட்டிடவும், கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக ளுக்குமான அதிகாரங்களைப் பங்கிடவும் தொடர்ந்து கொடுத்து வருகிறது தி.மு.கழகம். அந்தக் குரலைத் தான் காந்தி கிராம பல்க லைக்கழகப் பட்டமளிப்பு விழாவிலும் முதலமைச்சர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
பெருந்தடையாக இருப்பது ஆளுநர் என்கிற நியமனப் பதவி!
மாநில உரிமைகளுக்குப் பெருந்தடையாக இருப்பது ஆளுநர் என்கிற நியமனப் பதவி. அதனைப் பயன்படுத்தி மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் போக்கு தொடர்வது கூட்டாட்சி முறைக்கு ஏற்றதல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் தீர்மானங்களை, சட்டமுன்வடிவுகளை ஆளுநர் கிடப்பில் போடுவது அரசியல் சட்டத்திற்கு முரணானது என்பதை 7 பேர் விடுதலைக்கான நீதிமன்றத் தீர்ப்பும் உறுதி செய்துள்ளது.
கூட்டாட்சிக்கொள்கையை வலுப்படுத்தும்!
இதற்குப் பிறகும், மாநில அரசின் சமூக நீதிக் கொள்கைகளுக்கு மாறாக ஆளுநர் தனி ஆவர்த்தனம் செய்வது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும். உயர் கல்வி நிலையங்களைத் தன்னுடைய சங்கித்வா கொள்கைக்கான பிரச்சாரக் களமாக மாற்ற நினைக்கும் ஆளுநரின் முயற்சிகள் நிறுத்தப்பட வேண்டும். அதன் முதல்கட்டமாக, திராவிட முன்னேற்றக் கழகமும் தோழமைக் கட்சிகளும் குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள மனுவின் அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்குவதே சரியானத் தீர்வாக அமையும். நமது முதலமைச்சர் வலியுறுத்தியபடி கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதே கூட்டாட்சிக் கொள்கையை வலுப்படுத்தும். கழகத் தலைவர் அவர்களின் உன்னதமான இந்தக் கோரிக்கையை இந்திய ஒன்றிய அளவில் முன்னெடுப்பதில் கழகத் தகவல் தொழில்நுட்ப அணி விரிவான செயல்திட்டத்துடன் களமிறங்கத் தயாராக இருக்கிறது." என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!