Politics
தெலங்கானாவில் முடியாமல் தமிழ்நாட்டில் செய்வேன் என வீர வசனம் பேசும் தமிழிசை.. தக்க பதிலடி கொடுத்த சிலந்தி!
கேள்வி: தமிழகத்தில் மூக்கையும், தலையையும், வாலையும் நுழைப்பேன் என ஆளுநர் தமிழிசை பேசியுள்ளாரே; படித்தீர்களா?
பதில்: தெலுங்கானாவில் அவரால் எதையும் நுழைக்க முடியாத ஆதங்கத்தில் தமிழகத்தில் நுழைப்பேன் என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். ஒரு வேளை தெலுங்கானாவில் தேவையின்றி மூக்கையும், தலையையும், வாலையும் நுழைத்து பட்டிடும் பாட்டால் வெளி வந்த ஆதங்கப் பேச்சாகக் கூட இது இருக்கலாம்.
இது தமிழக ஆளுநருக்கு அம்மையார் மறைமுகமாகத் தந்த எச்சரிக்கையாகவே தெரிகிறது. தமிழ்நாட்டில் மூக்கையும், தலையையும், வாலையும் நுழைத்து அம் மையார் சொன்ன செய்தியை, ஆளுநர் ரவி கவனமாகப் படித்திட வேண்டும்!
(தெலுங்கானா ஆளுநராக) எனது பணிகள் இடையூறாக இருப்பதாக ஆட்சியாளர்கள் சில நேரங்களில் நினைத்து விடுகிறார்கள்! குடியரசு தினத்தன்று தெலுங்கானா மாநிலத்தில் என்னை கொடியேற்ற விட வில்லை. ராஜ்பவன் வளாகத்தில் நான் கொடியேற்றிக் கொண்டேன். சில காரணங்களால் என்னை கவர்னர் உரையாற்றவும் விடவில்லை என்றெல்லாம் ஆளுநர் தமிழிசை பேசியுள்ளார்!
தமிழ்நாட்டில் மூக்கையும், தலையையும், வாலையும் நுழைத்து தெலுங்கானா ஆளு நர் பேசிய இந்தப் பேச்சு, தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கு, 'இது போன்ற நிலை உங்களுக்கும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.' என எச்சரிக்கை விடுத் திட பேசிய பேச்சாக இருந்தால் வரவேற் கிறோம். ஒருவேளை வேறு அர்த்தத்தில் பேசியதாக அவர் கூறுவாரேயானால்,அம்மையாருக்கு ஆப்பசைத்து வாலை இழந்த குரங்கின் கதை தெரிந்திருக்கும். அதனை நினைவுகூற வேண்டுகிறோம்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!