Politics
பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு மிரட்டல்.. பாஜக நிர்வாகிகள் செயலுக்கு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!
பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அமெரிக்கா சென்று இன்று சென்னை திருப்பிய நிலையில் அது குறித்து செய்தி சேகரிக்க சில செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க பாஜகவின் தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு ஒருவர் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த செய்தியாளர்கள் அந்த காட்சியை படம்பிடித்துள்ளனர். அப்போது அங்கு வந்த சில பாஜக உறுப்பினர்கள் செய்தியாளர்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியும் உள்ளனர். இந்த சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த நிகழ்வுக்கு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்" மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது.
பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் அமெரிக்கா சென்று இன்று சென்னை திரும்பியுள்ளார் இதன் காரணமாக செய்தி சேகரிக்க சென்னை பாஜகவின் தலைமை அலுவலகத்திற்கு பத்திரிகையாளர்கள் சென்றுள்ளனர்.
அதுசமயம் திடீரென ஒருவர் மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டார் அந்த காட்சியை சில பத்திரிகையாளர்கள் படம் பிடித்து உள்ளனர்.இதை கண்டித்து பாஜகவின் நிர்வாகிகள் சிலர் பத்திரிகையாளர்களை மிகவும் மோசமான வார்த்தைகளால் திட்டியும் மிரட்டியும் உள்ளனர்.அங்கே நடைபெற்ற சம்பவங்களை தானே பத்திரிகையாளர்கள் படம் பிடித்து உள்ளனர். பத்திரிகையாளர்கள் மீது சம்பந்தமே இல்லாமல் கோபம் எதற்காக???தொடர்ந்து பாஜகவினர் பத்திரிகையாளர்கள் மீது ஆவேசம் கொள்வது ஏன்??
இனியும் இது போன்ற நிகழ்வுகளை அனுமதிக்க முடியாது! தமிழகத்தில் ஒட்டுமொத்த பாஜகவின் நிகழ்வுகளை புறக்கணிக்க "தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்" முயற்சி மேற்கொள்ளும் என்பதையும் இதன் மூலம் தெரியப்படுத்தி கொள்கிறோம்.மேலும் இந்த சம்பவத்திற்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் வருத்தம் தெரிவித்து உள்ளார். நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
அண்ணாமலை அவர்கள் கூறியது போல உறுதியாக நடவடிக்கை மேற்கொள்வார் என நம்புகிறோம்.நாங்கள் இல்லை என்றால் நீங்கள் இல்லை என்பதை அறிந்து செயல்பட இந்த நேரத்தில் நினைவு படுத்த விரும்புகிறோம்." என்று கூறியுள்ளார்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!