Politics

"நீங்கள் வேலை செய்தது 11 ஆண்டுகள் அல்ல,9 ஆண்டுதான்" -IPS வேலை குறித்து பொய் சொல்லி மாட்டிய அண்ணாமலை !

தற்போது சமூகவலைத்தளம் பெரிய அளவில் பரவியுள்ளது. இதன் மூலம் பரவும் சில செய்திகள் பொய் என்பதும் கண்டறியப்பட்டு வருகிறது. ஆனால், இப்படி பரவும் பொய் செய்திகளில் பெரும்பாலானவை பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களால் தான் தற்போது பரப்பப்பட்டு வருகிறது.

கடந்த 20145-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் முக்கிய காரணமாக இருந்தது சமூகவலைத்தளங்கள்தான். அப்போது பாஜக பரப்பிய பொய்ச்செய்திகள் உண்மை என்றே மக்களால் நம்பப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்கு பின்னர் பாஜக சொன்னது அனைத்தும் பொய் என்பது தற்போது அனைத்து தரப்பினரையும் எட்டியுள்ளது.

அதிலும் தமிழ்நாட்டில் பாஜக சொல்லும் பொய்களை எப்போதுமே மக்கள் நம்பியது இல்லை. ஆனாலும், பாஜக தலைவர்கள் பொய் சொல்வதை ஒருபோதும் நிறுத்தியதில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழ்நாட்டுக்கு வந்தபோது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 95% பணிகள் முடிக்கப்பட்டதாக அப்பட்டமாக பொய் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் தனது வேலை குறித்தே பொய் கூறியது தெரியவந்துள்ளது. கோவை சிவானந்தா காலனி பகுதியில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "முதல்வருக்கு IPC பற்றி தெரியுமா என்று எனக்குத் தெரியாது. நான் 11 ஆண்டுகள் அதாவது 5000 நாட்களில் நான் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட IPC வழக்குகளை பதிவு செய்துள்ளேன்." என்று கூறினார்.

இந்த நிலையில், அண்ணாமலை IPS-ஆக பணியாற்றியது 11 ஆண்டுகள் அல்ல, 6 ஆண்டுகள்தான் என்பது தெரியவந்துள்ளது. அதாவது, அண்ணாமலை 2011 IPS பேட்ச்சை சேர்ந்தவர். 2013 செப்டம்பர்

மாதம் அவருக்குASP பணி வழங்கப்பட்டது. அதன்பின்னர் 6 ஆண்டுகள் அதிகாரியாக பணியாற்றிய அவர், 2019 செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம் அண்ணாமலை IPS அதிகாரியாக 9 ஆண்டுகள்தான் இருந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இணையத்தளத்தில் பலரும் அண்ணாமலையை கிண்டல் செய்து வருகிறார்கள். பல பொய்களை சொல்லும் அண்ணாமலை இப்போது தன்னை பற்றியே பொய்ச்சொல்லி வருகிறாரா என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

Also Read: ஒரே நாளில் பங்குச்சந்தையில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு.. மோடி அரசின் நடவடிக்கையால் வீழ்ச்சியில் பொருளாதாரம்!