Politics
சொந்த தொகுதியில் வெல்ல முடியாதவர் ஆட்சியை கவிழ்ப்பாரா? -அண்ணாமலையை சுட்டிக்காட்டிய தெலுங்கானா முதல்வர்!
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டேவை வைத்து அங்கு கூட்டணியில் இருந்த சிவசேனா,தேசியவாத காங்கிரஸ்,காங்கிரஸ் கூட்டணி அரசை பாஜக கலைத்து புதிதாக ஆட்சியமைத்தது.
அதைத் தொடர்ந்து சமீபத்தில் உத்தவ் தாக்கரே அரசை கலைத்தது போல தமிழ்நாட்டிலும் திமுகவில் இருந்து ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் என்றும் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவிற்கு ஏற்பட்ட நிலைமைதான் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ்வுக்கு ஏற்படும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
அவரின் இந்த பேச்சு இணையத்தில் அதிகமாக கலாய்க்கப்பட்டது. 4 எம்.எல்.ஏக்களை வைத்து ஆட்சியை கலைக்க முடியாதுப்பா என சிலர் அண்ணாமலையை கிண்டல் செய்தனர்.
இந்த நிலையில், தெலுங்கானா மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ்வும் அண்ணாமலையை கலாய்த்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை கவிழ்க்க போவதாக பாஜக கூறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து கூட ஏக்நாத் ஷிண்டே வர போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொல்கிறார். அவரால் அவரின் சொந்த தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. சொந்த தொகுதியில் வெற்றியை பெற முடியாத அண்ணாமலைதான் தமிழ்நாட்டில் ஆட்சியை கவிழ்க்க போகிறாரா?
உண்மையில் ஏக்நாத் ஷிண்டே வகை அரசியல்தான் உங்களின் அரசியலா? இதுதான் உங்களின் ஜனநாயகமா? . தெலுங்கானாவில் நாங்கள் 103 எம்எல்ஏக்களை வைத்து இருக்கிறோம், நட்பான கட்சிகளோடு எங்களுக்கு 110 எம்.எல்.ஏக்கள் பலம் உள்ளது." என அண்ணாமலையை விமர்சித்துள்ளார்.
Also Read
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!