Politics
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை.. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளருக்கு 704 நாட்களுக்கு பிறகு ஜாமீன் !
கடந்த அக்டோபர் மாதம் உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை காப்பாற்ற பெண்ணின் உடலை யாருக்கும் தெரியாமல் அம்மாநில போலீசார் அவசர அவசரமாக எரித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து செய்தி சேகரிக்க டெல்லியில் பணியாற்றிய கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பான், ஹத்ராஸ் செல்லும் வழியில் கைதானார்.தலித் சிறுமி வன்கொலை விவகாரத்தை வைத்து தன்னுடைய அரசுக்கு எதிராக சிலர் சதி செய்வதாக ஆதித்யநாத் கூறிவந்த நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற கப்பானையும் அவருடன் சென்ற மூவரையும் கைது செய்தது ஆதித்யநாத் அரசாங்கம்.
இதைத் தொடர்ந்து ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசை கண்டித்து நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன.சித்திக் கப்பன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இரும்புச் சங்கிலியால் கட்டிலுடன் சித்திக் பிணைத்துவைக்கப்பட்டிருக்கிறார் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினருகு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சித்திக் கப்பன் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் கோரி பத்திரிகையாளர் சித்திக் கப்பான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சித்திக் கப்பான் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதங்களை முன் வைத்தார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பானுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும்அடுத்த ஆறு வாரங்களுக்கு டெல்லியில் தங்கி இருக்கவும், அதன் பிறகு கேரளாவிற்கு சென்று உள்ளூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!