Politics
”பொறுப்பான ஆளா இருந்துட்டு இப்படி பன்றத ஏத்துக்க முடியாது” - எஸ்.வி.சேகர் மீது ஐகோர்ட் அதிருப்தி!
பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார். இதுதொடர்பாக சென்னை காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரில், எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது பெண் நிருபர்களை பேசிய விவகாரம் தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது புகார்தாரர் சார்பில் கடந்த 2020ஆம் ஆண்டில் நடிகர் எஸ்.வி. சேகர் சமூக வலைதளங்களில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவிட்ட பதிவுகளை அவர் மறுபதிவு (Re Tweet) செய்துள்ளதாகவும், அதனை நீக்கியுள்ளதற்காக பதிவுகளை நீதிபதி முன்பு சமர்ப்பிக்கப்பட்டது.
அப்பொழுது குறுக்கிட நீதிபதி மற்ற பதிவுகளை அவர் படிக்காமல் பகிர்ந்ததை ஏற்று கொள்ளலாம் ஆனால் இதுபோன்று மறுபதிவு செய்ததை ஏற்று கொள்ள முடியாது.
சமுதாயத்தில் பொறுப்பான மனிதராக இருந்து கொண்டு இது போன்ற செயலை செய்வது ஏற்று கொள்ள முடியாது. நடிகர் எஸ்.வி.சேகரிடம் இதுதொடர்பாக விளக்கமளிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 22ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!