Politics
“2 ஆடு மாடு வச்சிருக்குறவருக்கு எதுக்கு 'y' பிரிவு பாதுகாப்பு.. வேணாம்னு சொல்லலாம்ல?” : பிரேமலதா சாடல்!
“இரண்டு பெட்டிகள், ஆடு மாடுகள் வைத்திருப்பவருக்கு எதற்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு?” என தே.மு.தி.க மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சமீபகாலமாக தி.மு.க அரசு குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் பொய்யான செய்திகளைக் கூறி அவதூறு பரப்பி வருகிறார்.
சமீபத்தில் பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு முறைகேடாக மின்சார ஒப்பந்தம் செய்ததாக குற்றம்சாட்டினார் அண்ணாமலை. இதனை எதிர்த்து பி.ஜி.ஆர் நிறுவனம் அண்ணாமலை மீது 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்தது.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் பயணம் மேற்கொண்டது தொடர்பாகவும் அண்ணாமலை அவதூறு பரப்பினார். இதையடுத்து, தி.மு.க அமைப்புச் செயலாளா் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலையிடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்துப் பேசிய அண்ணாமலை, “என்னிடம் இரண்டு பெட்டி, ஊரில் ஆடு, மாடுகள் தான் உள்ளன. இதை வேண்டுமானால் பிடித்துக்கொண்டு செல்லுங்கள். ஒரு சாதாரண மனிதனை மதித்து கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு கேட்கின்றனர். அதற்கு நான் வொர்த் இல்லை.” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், “இரண்டு பெட்டிகள், ஆடு மாடுகள் வைத்திருப்பவருக்கு எதற்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு?” என தே.மு.தி.க மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.
பெட்ரோல் - டீசல் மற்றும் சிலிண்டர் எரிவாயு விலை உயர்வை கண்டித்து விருதுநகரில் தே.மு.தி.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய பிரேமலதா, “மக்கள் வரிப்பணத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆடு, இரண்டு பெட்டி, இரண்டு மாடு வைத்திருப்பவருக்கு எதற்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு. தைரியமிருந்தால் அந்த பாதுகாப்பு வேண்டாமென ஒன்றிய அரசுக்கு அவர் கடிதம் எழுத வேண்டியதுதானே.” எனப் பேசியுள்ளார்.
Also Read
-
முகத்தை மறைத்து சென்ற பழனிசாமி: பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. Chennai Press Club கண்டனம்!
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!