Politics
ஆர்ப்பாட்டத்துக்கு ஆள் வராததால் பள்ளி சிறுவர்களை அழைத்து வந்த கொடுமை; அதிமுகவினரால் மக்கள் அதிருப்தி!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றபோது ராயபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் திமுக பிரமுகரை அரை நிர்வாணப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஜெயக்குமாரின் கைதை கண்டித்து 32 மாவட்டங்களிலும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் ரயில் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளர் ஆர். காமராஜ் தலைமையில் காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்று காலை 10 மணிக்கு அதிமுக நிர்வாகிகள் ஒரு சிலர் மட்டுமே அந்த பகுதியில் இருந்தனர். மேலும் அதிமுகவினர் கூட்டமும் மிக குறைவாக இருந்தது. இதனை அறிந்த அதிமுக நிர்வாகிகள் பல்வேறு ஊர்களில் இருந்து டாட்டா ஏசி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமான பொது மக்களை ஆபத்தான முறையில் வண்டியில் அமர வைத்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்தனர்.
இந்த வாகனங்களால் திருவாரூர் நகர் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் உண்டானது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலால் அவதிப்பட்டனர். குறிப்பாக பள்ளி செல்லும் சிறுவர்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்து அவர்கள் கையில் அதிமுக கொடியை கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட செய்தது பொதுமக்களிடையே முகம் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!