Politics

”நிதியமைச்சர் பேரில் கஜானாவை சுரண்டி காலி செய்தவர் ஓ.பி.எஸ்.” - அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டு!

திருவண்ணாமலை அடுத்த காஞ்சி கிராமத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 35வது கிளையினை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

40 பயனாளிகளுக்கு 21 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதேபோல் மின்வாரியம் சார்பில் 28 பயனாளிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மாநிலம் முழுவதும் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் 3 லட்சத்து 24 ஆயிரம் கோடி வைப்புத்தொகை இருப்பதாகவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1138 கோடி வைப்புத்தொகை உள்ளதாகவும் கூறியவர், திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் கடன் நிலுவை தொகை 1668 கோடி என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்களுக்காக சமூக தொண்டு செய்வதற்காக தொடக்கப்பட்ட இயக்கம் திமுக என்றும், பாஜக மாநில தலைவருக்கு பதில் சொல்வது நேரத்தை வீணடிப்பது சமம் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த 10 ஆண்டுகாலம் நிதித்துறை அமைச்சராக இருந்து அரசு கஜானாவை சுரண்டி காலி செய்தவர் என்றும் விமர்சித்தார்.

Also Read: கரூரில் தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்: விரைவில் கைதாகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்?