Politics

”ஒரு செங்கல்தான்; இந்திய துணைக்கண்டத்தையே மிரள வைத்தவர் உதயநிதி” - அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

அரசியல் நடத்த பல்வேறு தளங்கள் உள்ள நிலையில், கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோயில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோயிலில் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை மானிய கோரிக்கை முதலமைச்சர் வழிகாட்டுதலோடு, சிறப்பான மானிய கோரிக்கை அறிவித்து உள்ளோம். அரசியல் நடத்த பல்வேறு தளங்கள் உள்ள நிலையில், கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கேட்டுகொள்கிறேன்.

இது சட்டத்தின் ஆட்சி, சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அரசு அமைதியாக இருக்காது. பக்கத்து மாநிலங்களில் குறைவான மக்கள் தொகை இருந்தும், தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே அதுபோன்ற சூழ்நிலையை இங்கு உருவாக்க வேண்டாம். வீட்டில் இருந்தே, விநாயகரை வழிபட்டாலும், அவர்கள் கோரிக்கையை விநாயகர் ஏற்று கொள்வார்.

ஒரு செங்கலை வைத்து இந்திய துணைக்கண்டங்களில் உள்ள அனைத்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தவர் உதயநிதி. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு சூறாவளியாக பிரச்சாரம் செய்து, அரசியல் தனி முத்திரையை பதித்து உள்ளார். எனவே எத்தனை அணைகள் போட்டாலும், உதயநிதியின் அரசியல் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலையின் விமசர்சனத்திற்கு பதிலளித்துள்ளார்.

கோயில்களில் இன்று முதல் முடி காணிக்கை செலுத்துவதற்கு இலவசம் என்றும் பழனி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கலில் முடி காணிக்கை செலுத்த இலவசம். கோயில்களில் மொட்டையடிக்கும் பணியாளர்களுக்கு உரிய தொகையை வழங்கள் கோயில் நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளர்.

Also Read: ”ஊக்கத்தொகை முதல் சோலார் விளக்குகள் வரை” - இந்து சமய அறநிலையத்துறையின் அசத்தலான 112 அறிவிப்புகள்!