Politics

தாலிக்கு தங்கம்: அதிமுக அரசின் அலட்சியம்; கிடப்பில் கிடக்கும் 3 லட்சம் விண்ணப்பங்கள் - அமைச்சர் கீதாஜீவன்

சென்னை தலைமை செயலகத்தி்ல் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கீதா ஜீவன் தகவல் தெரிவித்தார். அப்போது, சமூக நலத்துறையிடம் அனுமதி பெறாமல் செயல்பட்ட 3 காப்பகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் காப்பகங்களின் செயல்பாடுகள் குறித்து சமூக நலத் துறையில் துணை இயக்குனர் தலைமையில் ஆய்வு நடத்தி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாவும் அமைச்சர் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க ஒரு சேவை மையம் தருமபுரி மற்றும் தூத்துக்குடியில் செயல்பட தொடங்கியுள்ளது என்றும் தமிழகம் முழுவதும் மையத்துக்கான கட்டிடங்கள் அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

காெரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 126 என்றும், பெற்றோர்களில் ஒருவர் இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 4056 என்றும் அவர் தெரிவித்தார்.

பெண் சிசுக்கொலை தற்போது இல்லை என்றாலும், இது குறித்தான விழிப்புணர்வு ஏற்கனவே நடைபெற்ற மாவட்டங்களில் மேற்கொள்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு தங்கம் திட்டத்தை செயல்படுத்த 2 ஆயிரத்து 703 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், கடந்த ஆட்சியில் உரிய திட்டமிடலுடன் திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 பேர் விண்ணப்பித்து காத்திருப்தாகவும், இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்ட பின்னரே புதிய பயனாளிகளுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.