Politics
‘சங்கறுத்துடுவேன்’ என சேலத்தில் போலிஸாரை மிரட்டி அவினாசியில் பதுங்கிய இந்து முன்னணி பிரமுகர் கைது!
சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டியில் போலிஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்ததில் வாகனத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் போலிஸார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதையடுத்து அபராதம் செலுத்திய நபர், அவரது நண்பரும், இந்து முன்னணி நிர்வாகியுமான செல்லப்பாண்டியனிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செல்லப்பாண்டியன், போலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
மேலும் "வசூலித்த கட்டணத்தைத் திருப்பி கொடுக்காவிட்டால், சங்கை அறுத்துவிடுவேன், குத்தி கொலைசெய்து விடுவேன், பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவேன். டூட்டி போட்டாங்கனா அப்படியே ஓரமா உட்கார்ந்துவிட்டு போகவேண்டியது தானே, உங்களுக்கு இருக்கும் பவரு எனக்கும் இருக்கு, நான் இந்து முன்னணி ஒன்றிய தலைவர்" என போலிஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்லியம் ஜேம்ஸ் கொடுத்த புகாரின் பேரில், செல்லப்பாண்டியன் மற்றும் தமிழரசன் ஆகியோர் மீது ஆபாசமாகத் திட்டியது, பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் மற்றும் மத ரீதியாக விமர்சனம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே போலிஸாருக்கு, செல்ல பாண்டியன் கொலை மிரட்டல் விடுவதை, அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் போலிஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தீவிரமானதும் சேலத்தில் இருந்து தப்பியோடி கோவை மாவட்டம் அவினாசியில் பதுங்கியிருக்கிறார் வீரமாக மிரட்டல் விடுத்த செல்ல பாண்டியன். அவினாசியில் அவர் தலைமறைவாக இருப்பதை அறிந்த போலிஸார் உடனடியாக விரைந்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!