Politics
தோண்ட தோண்ட வெளியே வரும் பூதம் : பா.ஜ.க முன்னிறுத்தப் போகும் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை குறித்த தகவல்கள் !
இந்திய நாட்டின் அரசியலில், வலது சாரிகளின் இந்துத்வா கருத்தியலையும், மனுவாத அராஜகங்களைத் தலைத்தூக்க விடாமால் தமிழகம் தடுத்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் ஆதிகத்தைச் செலுத்தி வரும் வலதுசாரி கும்பல்கள் தமிழகத்தில் காலூன்ற விடாமல் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னின்றி எதிர்க்கிறது.
இதனால் தமிழகத்தில் தங்களின் செல்வாக்கை பெருக்க பா.ஜ.க பல குறுக்கு வழிகளை கையில் எடுத்துள்ளது. தமிழகத்தை ஆன்மிக பூமியாக மாற்றுவதாக கூறி, குஜராத், உத்தர பிரதேசம் போன்ற கலவர பூமியாக மாற்ற கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது.
அதற்காக, அ.தி.மு.க, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மாரிதாஸ் போன்றோரைக் களம் இறக்கியுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்காக காந்திருந்து நொந்துபோன மக்கள் அவரின் அரசியல் பிரவேசத்தை கடந்துப் போகத் துவங்கியுள்ளனர். ஆனாலும் தனது மலிவான அரசியலை ரஜினியை வைத்து தற்போது நகர்த்த தொடங்கியுள்ளது.
குறிப்பாக மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும் போதெல்லாம் ரஜினியைப் பேச வைத்து பிரச்சனையை திசை திருப்பும் நடவடிக்கையில் பா.ஜ.க ஈடுபடுகிறது. இந்நிலையில், ரஜினிக்கு ஒத்தாசையாக சமீபத்தில் பலராலும் பேசப்படும் ஒருநபரை களம் இறக்கியுள்ளது பா.ஜ.க.
அப்படி பா.ஜ.க சமீபத்தில் இறக்கியுள்ள நபர்தான் அண்ணாமலை. தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் கடந்த 2011ம் ஆண்டு ஐ.பி.எஸ் ஆக தேர்வாகி கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் பணியாற்றி வந்தார். சினிமா போலிஸ் பாணியில் தொடர்சியான அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட அண்ணாமலை 2018ம் ஆண்டுக்குள் டி.சி.பியாக பதவி உயர்வு பெற்றார்.
உடுப்பி சிங்கத்தால் (அண்ணாமலை) எல்லாம் சரியாக போகிறது என ஊர் மக்கள் கொண்டாடும் வேலையில், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். வேலைபளுக் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் விவசாயத்தில் குதிக்கப்போவதாகவும் ஊடகங்கள் முன்பும் பளீச் என்று சிரித்தமுகத்தோடு பேட்டியளித்தார்.
அவ்வளவுதான், “வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயத்திற்கு வந்த ஐ.பி.எஸ் அதிகாரி” என சில மோடி அரசு ஆதரவு ஊடகங்கள் தோளில் போட்டுக் கொண்டாட ஆரம்பித்தனர். அதனைத் தொடர்ந்து, தன்னை பரிச்சயமானவராக மாற்றிக்கொள்ள, சில ஆர்.எஸ்.எஸ் மறைமுக குழுவுடன் வேலைப்பார்க்க ஆரம்பித்தார்.
இந்நிலையில், இந்த இடைப்பட்ட ஒருவருடகாலத்தில் அண்ணாமலைப் பற்றி எந்த செய்தியும் ஊடகங்களில் வராத நிலையில் தற்போது, மீண்டும் ஊடகங்கள் குறிப்பாக வலதுசாரி ஊடகங்கள் அவரைப் பற்றி பேசத் துவங்கியுள்ளனர். அதற்கு காரணம் என்னவென்றால், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. அதற்காகதான், ரஜினி, அண்ணாமலை உள்ளிட்டோரை ஊடகங்கள் பேசத் துவங்கியுள்ளனர்.
தமிழகத்தில் சிலர், ‘அண்ணாமலையை வலதுசாரியாக சித்தரிக்க முயல்கிறார்கள்’ என பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்கள் பலர் கொந்தளிக்க துவங்கியுள்ளனர். அப்படியென்றால் அண்ணாமலை எங்கள் ஆள் இல்லை என்பதே அவர்களின் வாதம். அண்ணாமலை நேரடியாக பா.ஜ.கவின் உறுப்பினர் அட்டை வைத்திருக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் செயல்பாடுகள் நேரடி பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையதாகவே உள்ளது.
உதாரணமாக ‘யூத் திங்கர்ஸ் ஃபோரம் Youth Thinkers Forum’ என்ற அமைப்பு ஆர்.எஸ்.எஸ்ஸால் மறைமுகமாக நிர்வகிக்கப்படும் அமைப்பாகும். இந்த அமைப்பில் பணியாற்றி, பல கூட்டங்களில் செற்பொழிவுவாற்றியுள்ளார் அண்ணாமலை.
அதேபோல், தற்போது அண்ணாமலையால் செயல்படுத்தப்படும் ‘நல்லோர் வட்டம்’ ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்புதான். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை வேரூன்ற செய்தவர்களில் முக்கியமானவர் சிவராம் ஜோக்லோக்கர். இவர் மூலம் வந்தவர்தான் ஜெ.பிரபாகர். சிவராமன் தொடங்கிய நல்லோர் வட்டம் அவரைத் தொடர்ந்து பிரபாகர் நடத்திவருகின்றார். அந்த அமைப்பில் தான் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.
மேலும், ஹரே ராமா ஹரே, கிருஷ்ணா என்ற வலதுசாரி அமைப்பு அக்ஷயபாத்ரா என்ற பெயரில் நடத்திவரும் பள்ளிக்கூட மதிய உணவுத் திட்டத்துக்கு அண்ணாமலை நல்லெண்ண தூதுவராகவும் இருந்துள்ளார். இப்போதும் கூட சொல்வார்கள் இது ஒரு நேரடி தொடர்பு இல்லை என்று.
சரி அடுத்து நேரடி தொடர்பு என்னவென்றால், அண்ணாமலை வைக்கும் கோஷம் தான். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், சுயசார்பு பற்றி நீட்டி முழங்கியிருக்கிறார். இந்த சுயசார்பு வார்த்தை பற்றி தேடி பாருங்கள் யார் யார் வாயில் இருந்து வந்தது என்று நிச்சயம் தெரியும்.
அதுமட்டுமல்லாது, இந்தியாவிற்கு சி.ஏ.ஏ அவசியம், ஜே.என்.யூ மாணவர்களை படிக்கவிடாமல் அரசியல்வாதிகள் தடுப்பதாகவும் கூறுகிறார். மாணவர்கள் அரசியல் பேசுவதை விரும்பாத பா.ஜ.கவின் நிலைப்பாட்டையும், சிஏஏ விவகாரத்தில் ஆதரவு நிலைப்பாட்டையும் எடுத்துள்ளாரே இது நேரடி தொடர்பு இல்லையா என்றால் அதற்கும் இல்லையென்றே வலதுசாரிகள் கூவுவார்கள்.
வரலாற்று நெடுகிழிலும் போலி தேசபக்தி, மூட நம்பிக்கை, இத்துத்வா என மக்களை அடிமைப்படுத்தும் எந்த படுபாத சித்தாந்தங்களையும் தமிழக மக்கள் அனுமதித்தது கிடையாது, இனியும் அனுமதிக்கமட்டார்கள். இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல நாடுமுழுவதும் உள்ள இளைஞர்கள் பா.ஜ.க அரசின் மோசமான செயல்பாடுகளை உணரத்துவங்கியுள்ளர். இதில் தமிழக இளைஞர்கள் ஒருபடிமேலச் சென்று விரட்டத் துவங்கியுள்ளனர்.
தமிழகத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் நிச்சயம் தமிழகத்தை பெரியார் பூமியாகவே வைத்திருப்பார்கள். ஏனெனில் தமிழகம் சிறந்த சித்தாந்தத்தால் வளர்க்கப்பட்ட பூமி. இப்படியான போலிகள் எந்த முகமூடி போட்டு வந்தாலும் தமிழக மக்கள் விரட்டியடிப்பார்கள் என்பதே உண்மை. போலிகளை அடையாளம் கண்டு மக்கள் முன்பு நிறுத்தும் பணியை செய்வோராகவே இந்த கட்டுரை எழுதப்படுகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!