Politics

அமைச்சர் வேலுமணியின் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட பொய்வழக்கு: கைதான கோவை தி.மு.க நிர்வாகிகளுக்கு ஜாமின்!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தூண்டுதலின் பேரில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட கோவை தி.மு.க தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் வேலுமணியை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் தி.மு.க உறுப்பினர் செய்தி வெளியிட்டது தொடர்பாக காவல்துறையினர் தி.மு.க உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறை கைது செய்தனர்.

இந்த கைதை கண்டித்து கோவை தி.மு.க தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அமைச்சர் வேலுமணி தூண்டுதலின் பேரில் ஆழியார் காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் 30ஆம் தேதி மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் ஒன்றிய செயலாளர் துரை ஆகியோரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தது.

Also Read: “கோவையின் கனிமவளத்தை கபளீகரம் செய்யும் அமைச்சர் வேலுமணி”: நியாயம் கேட்ட தி.மு.க பொறுப்பாளர் கைது!

இதனையடுத்து ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிடுகையில் இது அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் கைது செய்திருப்பதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி ஆகவே இதுபோன்ற கைதுகள் நடப்பதாகும் வாதத்தை எடுத்து வைத்தார்.

இதைக்கேட்ட நீதிபதி கோவை தி.மு.க தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகளுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Also Read: அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் ஆலோசனை கூட்டத்தில் இருந்த வேலுமணி பரிசோதனை செய்தாரா?: தி.மு.க எம்.எல்.ஏ கேள்வி