Politics
“இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம்” - ‘தேசம் காப்போம்’ பேரணியில் திருமாவளவன் பேச்சு!
இஸ்லாமியர்களை தனிமை படுத்த, விடுதலை சிறுத்தைகள் விடாது என்று திருச்சியில் நடைபெற்ற பிரமாண்ட ‘தேசம் காப்போம்’ பேரணியில் திருமாவளவன் உறுதிபட தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ‘தேசம் காப்போம்’ பேரணி நடைபெற்றது. அக்கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி, தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கையை கைவிட வேண்டும், தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு உரிமை பாதுகாத்திட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் பேரணியின் முடிவில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து மக்கள் முன்னிலையில் பேசிய திருமாவளவன், “நாங்கள் இஸ்லாமியர்கள் இல்லையென்றாலும், குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பதற்கு காரணம், நாங்கள் ஜனநாயக சக்திகள். பா.ஜ.க அரசியல் கட்சி அல்ல. பா.ஜ.கவை இயக்குவது சங் பரிவார். இந்து மத கொள்கை மீது மிகுந்த பற்று கொண்ட காந்தியையே கோட்சே, சுட்டுக் கொன்றார் என்றால் ஆர்.எஸ்.எஸ் எந்த மாதிரியான இயக்கம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்-க்கு பல அணிகள் உண்டு. அதில் ஒரு அரசியல் அணிதான் பா.ஜ.க. சங் பரிவாரின் வெறுப்பு, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீதுதான். இஸ்லாமியர்களை தனிமைப்படுத்த நாங்கள் ஒருபோதும் விடமாட்டோம்.” என்று அவர் பேசினார்.
Also Read
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாடிய தயாநிதி மாறன் MP!
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!