Politics
ஒன்றிய செயலாளரின் கன்னத்தில் ‘பளார்’ : அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ அடிதடி - பரபரப்பு தகவல்!
அ.தி.மு.க-வைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ-வும், அ.தி.மு.க ஒன்றிய செயலாளரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி அறைந்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பரமேஸ்வரி முருகன். உள்ளாட்சித் தேர்தலில் இவரது கணவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார்.
தோல்வியுற்ற முருகன் மீது, தேர்தலுக்காக வாக்குகளை ஏலத்துக்கு எடுத்ததாக குற்றசாட்டு எழுந்தது. தோல்வியடைந்த எம்.எல்.ஏவின் கணவர் வாக்குகளை ஏலத்தில் எடுப்பதற்காக கொடுத்த 14 லட்சத்தை திருப்பிக்கேட்டு பிரச்னை செய்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதனிடையே, கட்சி மேலிடத்தில் இருந்து தேர்தல் செலவுக்காக கொடுத்த பணத்தை எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன், முறையாக யாருக்கும் பிரித்துக்கொடுக்கவில்லை என்றும் கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பரமேஸ்வரி எம்.எல்.ஏ. தரப்புக்கும், மண்ணச்சநல்லூர் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார் தரப்புக்குமிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில், கடந்த ஞயிற்றுக்கிழமையன்று எம்.எல்.ஏ பரமேஸ்வரியை சந்திக்கச் சென்ற ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், டெண்டர் பெறுவதற்காக தான் கொடுத்த ஒரு லட்ச ரூபாயை திருப்பிக் கேட்டுள்ளார்.
பணத்தைக் கொடுக்க மறுத்த எம்.எல்.ஏ பரமேஸ்வரி, ஒன்றியச் செயலாளரை ஒருமையில் பேசி, கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ பரமேஸ்வரியை கன்னத்தில் திருப்பி அறைந்துள்ளார்.
கட்சிக்குள் பணம் தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதல் கைகலப்பாக மாறியிருப்பதால் திருச்சி மாவட்ட அ.தி.மு.க-வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!